என்னவென்றால் அவர்கள் பார்ப்பனர் தில்லுமுல்லுகளைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால், தங்கள் தில்லுமுல்லுகளில் அவர்கள் கண் வைக்கக் கூடாதுஅல்லவா? அதோ பாருங்கள் கத்தோலிக்க அதிகாரிகட்குச் சலுகை மேற்சலுகை சம்பள உயர்வுக்குச் சட்டமும் வளைந்து கொடுத்தது. அதோ பாருங்கள் பழைய பட்டயங்கள் செல்லரித்து விடுகின்றன. அதனால் பயனடைந்தவரிடமிருந்து செல்லரிக்காத பணம்,திருவாய் மொழிப் பெட்டியில் வந்து குவிகின்றது.
அத்தி பூத்ததுபோல் ஒரு நல்ல சொல் இன்று புதுவை மக்களின் காதில் விழுகின்றது. மருத்துவ மனையினின்று கன்னிமாடத்து மகளிர் வெளியேறி விட்டார்களாம். அப்படித்தான் போய்விடுங்களென்று யூனியன் ஆளவந்தார்களும் சொல்லிவிட்டார்களாம். இச்செய்தி உண்மையானால் யூனியன்காரர்களை நாம் ஒரு முறைக்கு இருமுறை வாழ்த்துகிறோம். இன்றோடு நோயாளிகள் கத்தோலிக்கர்களாய் இருந்தால்தான் கன்னிகளின் சலுகை கிடைக்கும் என்ற நிலை ஒழிந்தது சரி - பொது மருத்துவமனையில் மாதா கோயில் இருக்காதா? இருக்காது என்றால் மூன்று முறை வாழ்த்துவோம்.
|