அமைச்சரே தெரிந்து கொண்டிராமற் போனாலும் தாய்மொழி பற்றிய இந்த உண்மையை அவர் விடுதலையில் படித்தறிந்து கொண்டிருக்கலாம். அவை தமிழ் எண்கள் என்பதை அவர் அறிந்திருந்தும் அதைக்கூட்டத்தில் வெளியிடாததற்குக் காரணம் என்ன? என்பதுதான் இங்குக் கேள்வி. இது நிற்க. ஜன.17 என்ற நாள் இட்டு இந்த எண்கள் முதலில் இந்தியாவிலேயே தோன்றியவை என்ற குறிப்பை வெளியிட்ட ‘விடுதலை’ ஆசிரியர், அந்தச் செய்தியின் கீழ் அந்த எண்கள் இந்தியாவிலேயே தோன்றியவை என்று மொத்தமாகக் குறிப்பிட்டிருந்தாலும், அவை தமிழகத்தில் முதலில் தோன்றிய தமிழ் எண்களே என்ற குறிப்பையாவது எழுதியிருக்கலாம். அப்படி எழுதாதற்குக் காரணம் என்ன? இது இரண்டாவது கேள்வி. பெரியார் நன்கறிந்துள்ளார் இவை தமிழ்எழுத்துக்களே என்பதை நான் தெளிவாக விளக்கினேன் பெரியாருக்கு! அவரும் உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாக ஒரு கட்டுரையும் எழுதினார்.அவரும் இப்போது ஏன் சும்மா இருந்து விட்டார்? என்பது மூன்றாவது கேள்வி. இந்தக் கேள்விகட்கெல்லாம் சரியான விடை வேண்டுமானால் தமிழக அமைச்சரவை, தி.க.தலைவர் ஆகியோரின் இன்றைய மனநிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழரின் தாய்நாட்டை - அதாவது தமிழ்நாட்டின் மேல் தமிழர்க்கு இருக்கும் உரிமை பறிக்கப்பட வேண்டும்.அது வடவர்க்கும் பிறர்க்கும் உரிய நாடென்றே செய்யப்படவேண்டும்,அதனால் தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது; சென்னை இராச்சியம் என்று சொல்லுவதையே உறுதிப்படுத்த வேண்டும் என்று. இரண்டாவது, இந்தியைத் தமிழரின் தாய் மொழியாக்குவதற்குத் தமிழைத் தொலைக்க வேண்டும்; தமிழில் திருமணத்திற்கு இலக்கியமே இல்லை என்று பேச வேண்டும். தமிழுக்கு இலக்கியமே இல்லை என்று பேச வேண்டும். இந்த பேச்சுக்கு உதவியாக ஆங்கிலத்தைத் தமிழர்க்குத் தாய் மொழியாக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். ஆங்கிலம் இல்லா விட்டால் தமிழன் பல்லாண்டுகளின் முன்பாகவே தொலைந்து போயிருப்பான் என்று வாயடி அடிக்க வேண்டும்; தமிழர்க்கு வரலாறே இல்லை என்று அஞ்சாமல் கூற வேண்டும். மேலும், நமக்குத் தலைமையும், பதவியும் கொடுத்த தமிழ் மக்களுக்குச் சிறிதுகூட நன்றி காட்டவேண்டியதில்லை;அந்த உரிமைத் தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், நமக்கு மனச்சான்று வேண்டாம். உறங்கும்
|