(குயில், குரல்-3, இசை-33, 31.1.1961)
திரு. சம்பத்து தி.மு.க.வை விட்டு வந்துவிடவில்லை. ஆனால் அவர் தி.மு.க.வில் இருக்கின்றார் என்றும் சொல்லி விடமுடியாது. திரு. சம்பத்து அவர்களின் நெஞ்சம தி.மு.க. விலிருந்து விலகி விட்டது. திரு. சம்பத்து மட்டுமா? நல்லவர்களின் நெஞ்சமெல்லாம் விலகி விட்டன. அவர்களின் உடல்கள் மட்டும் தி.மு.க. வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. காரணம் என்ன எனில், தி.மு.க. வைத் திருத்தியமைக்க எண்ணுகின் றார்கள். முடியுமா என்றால் முடியாது என்று மூன்று முறை கூறுவோம். தி.மு.க. வில் பொல்லாதவர்கள் பலர், நல்லவர்சிலர், சிலரால் பலரைத் திருத்தவா முடியும்? தி.மு.க.விலுள்ள பொல்லதவர்கள் எங்குமுள்ள பொல்லாதவர்கள் போன்றவர்கள் அல்லர். கடைந்தெடுத்த பொல்லாதவர்கள். தாம் கொண்டிருந்த நல்ல கொள்கைகளை அவர்கள் தலைகீழாக மாற்றிக் கொண்டவர்கள். தமிழரின் தாலி அறுப்பதையே நோக்கமாகக் கொண்ட ஆச்சாரியிடம் கூட்டுச் சேரவும் ஒப்பிவிட்டார்கள். அவர்களைப் பொல்லாதவர்கள் என்று சொன்னால் பொருந்துமோ என்னவோ தெரியாது. தி.மு.க.வில் உள்ளவர்கள் எல்லாரும் தூய தமிழர்களல்லவா?அவர்கள் முகத்தில் தமிழ்த் தன்மை தாண்டவமாடவில்லையா? அவர்கள் எல்லாரும் நல்ல நிலைமை அடைந்திருக்கவில்லையா? உயர்ந்த ஊர்திகளில் உலவவில்லையா? உடைக்கென்ன பஞ்சமா? உணவில் என்ன பஞ்சமா? பார்ப்பனரால் இந்தப் பைந்தமிழ் நாடு கெட்டுப் போகின்றது என்ற உண்மையை மாற்றிப் பார்ப்பனரால் இந்தப் பழந்தமிழ் நாடு ஈடேறக் கூடும் என்று கூறிக்கொண்டு, அந்தத் தி.மு.க. பசங்கள் எதிர்வரக் கண்டால் முடிச்சுமாறிப் பசங்கள் எதிர் வந்தது போல் தோன்றுகின்றது எனக்கு! ஆனால்,
|