பார்ப்பனர் வால் ஒட்ட அறுக்கப்பட வேண்டும்; உருவ வணக்கம் ஒழிந்து போக வேண்டும்; சாதிகள் என்பதே மறைந்து போக வேண்டும்; தமிழகத்தைத் தமிழரே ஆளவேண்டும்; அது வடவனுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாது என்ற பெரியார் கொள்கையில் என்றைக் கிருந்தாலும் அந்தத் தி.மு.க. ஆட்கள் குதித்துத்தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கை என்னிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.
நான் சாகாதிருப்பதும் அந்தக் காட்சியைக் கண்ணாரக் காணத்தான்! அண்ணாதுரையின் போக்குக்குச் சம்பத்துத் தந்த மறுப்பும், நகர மன்றத்துக்குச் சீவரத்தினம் காட்டிய எதிர்ப்பும் தொண்ணூறோடு துவரம் பருப்பு அல்ல; தி.மு.க. வுக்கு அடித்த சாவுமணி. திருச்சிற்றம்பலம்!
|