பக்கம் எண் :

269

Untitled Document


     தேர்ந்து  வரும் மாணவர்கள் - புலவர்களில் நூற்றுக்கு எண்பது பேர்
எந்தன் என்று எழுதுகிறார்கள். இலக்கணம் படித்தார்கள் என்று சொல்லவே
முடியவில்லை. தமிழ் இலக்கணத்தை நன்றாக சொல்லித் தர வேண்டும்.கல்வி
அதிகாரிகள், அதில் கவலை கொள்ள வேண்டும்.

     தமிழிலக்கணம்   தெரியாத   ஒருவர்   இலக்கியக் கடலை கரைத்துக்
குடித்திருந்தாலும் பயனில்லை.

     கடைசியாக   ஒன்று  சொல்லுகிறேன். போலீசு ஸ்டேசன் என்பதற்குக்
காவல் நிலையம்   என்று    போட்டார்கள். அச்சொல் வழக்கத்துக்கு வந்து
விட்டது. அமைச்சர் பக்தவச்சலம்அதை   எடுத்து விட்டுப் போலீசு ஸ்டேசன்
என்றே போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.

     காரணம் என்ன தெரியுமா?

     அமைச்சர் பக்தவச்சலம் தமிழ் ஒழிய வேண்டும் என்னும் கூட்டத்தைச்
சேர்ந்தவர்.

     இலக்கணம்   வேண்டும்!   புலவர்கள்   அனைவரும்    மாணவர்க்கு
இலக்கணத்தை ஆசையோடு பொறுப்போடு கற்பிக்க வேண்டும்.  இப்போதோ
பக்தவச்சலனாரே கல்வி அதிகாரியாய் விட்டார்.

     புலவர்கட்கு   அவர்  நல்வழி காட்டுவார் என்பதில் நமக்கு நம்பிக்கை
யில்லை. தமிழ்த்துறை   உருப்படுமா    என்பதும் நமக்கு ஐயப்பாடே. கல்வி
அதிகாரிகள் விழிப்பாக இருந்தால்தான் தமிழுலகு உருப்படும்.