பக்கம் எண் :

270

Untitled Document

2. குயிலின் நிலை


(குயில், சென்னை, 15.5.62)


     சென்ற குயிலில் (1.5.62) பிழைகள் ஏராளம்.அதற்கு  காரணம் இன்னும்
அலுவலினரை வேண்டிய அளவு   அமைக்காததே.   இப்பொழுது அலுவல்
பார்த்துவருகின்றவர்கள் எத்தனை பேர் என்பதையும் இப்போது சொல்லிவிட
எண்ணுகிறோம் .   10 பேர்  இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம்.
அல்லது 5 பேர்கள்      இருக்கலாமோ என்று நீங்கள் எண்ணிவிடக்கூடும்.

     நான் ஒருவன், பொன்னடி ஒருவர்.சென்ற இதழில் பிழைபார்க்க ஆள்
இல்லாததால்   இருப்பவர்க்கும்   ஓய்வில்லாததால்  இலக்கணப்    பிழை
மிகுதியாயிற்று. இதற்காக வருந்துகிறோம்.

     இரண்டு மூன்று    தமிழறிஞர்களை     அலுவலகத்தில்  வேலைக்கு
அமர்த்தினால்இந்தக் குறைபாடுகள் நீங்கும்.

     அதன் பொருட்டுக் குயில்   வாங்குவோரைப் பெருக்குக.அவரவர்கள்
செலுத்த வேண்டிய பெருமன்ற      நுழைவுக் கட்டணம் செலுத்தியவர்கள்
உறுப்பினர் நன்கொடையை அனுப்பி உதவுக.

     குயில் பெற்றுவரும் உறுப்பினர் அதன்    ஆண்டிறையை அனுப்புக.

     குயிலுக்கு வந்த வறுமை, உறுப்பினர்க்கெல்லாம் வந்த வறுமை எனக்
கருதுக .குயிலுக்கு உடையவராகிய பெருமன்ற உறுப்பினர்  எல்லோருக்கும்
நாம் ஒரு உறுதி கூறுவோம் .

     குயிலுக்குநல்ல எதிர்காலம் உண்டு.தமிழகத்தில் குயில் ஈடற்ற  தமிழ்
ஏடாகத் திகழும் .