(குயில், குரல்-1, இசை-23, 4.11.1958)
காரைக்காலின் அரிசி, நெல் புதுவைக்கே (காரைக்கு வேண்டியது போக) அனுப்பப்பட வேண்டும். மாறாக அயலார்க்கு ஆதாயம் கருதி அனுப்பப்பட கூடாது என்று நாம் எழுதியபடியே நம் அரசினர் தலைவர் தக்க ஏற்பாடு செய்யத் துவங்கியுள்ளார் என்று கேள்விப்படுகின்றோம். அந்த நல்ல பணியைச் சற்று விரைவில் செய்து முடித்தால் மிக்க நலமாயிருக்கும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
|