பக்கம் எண் :

284

Untitled Document


     இவ்வருஞ்   செயல்  செய்தார் திருவாளர்  கி.ஆ.பெ. விசுவநாதனார்
வாழ்க என வாழ்த்தினார் எல்லாரும்.

     செந்தமிழ்க்  கொல்லையை அழிக்கப் புகுந்த நரிக்கூட்டம் எத்தமிழ்ப்
புலவர் கண்டு அஞ்சி நடுங்கிற்று என்று மகிழ்ந்தோம் நாம்.

     வரவேற்பு விழா பன்னிரண்டு மணியளவில் முடிய அதன்மேல் புலவர்
குழுவினர்    தம்மிற்கூடி   நல்ல பல தீர்மானங்களைச் செய்து முடிக்கவும்,
பண்ணியங்களும்   பல்கறிகளும்   பரிமாறி   வெத்திலைகள் கூவியழைக்க
வரிசையில் அமர்ந்து விருந்துண்டனர் புலவர் பெருமான்கள்.

     தொழுதகு புலவர் நிழற்படம் எடுக்கப் பெற்றனர் பின்னர்.

     அதன் பின்னர் புலவர் வந்ததற்கும் போவதற்கும் ஆன புகைவண்டி
இரண்டாம்  வகுப்புக்  கட்டணம்    தரப்பெற்றுப்  புகைவண்டி நிலையம்
நோக்கினர்.திரு.கி.ஆ.பெ.வி. இயங்கியானது புலவர்களை  ஏற்றிக் கொண்டு
பன்முறை பறந்தது வண்டிநிலையம் நோக்கி.

     இக்குறிப்பில்,    அங்கு   வந்திருந்த  புலவர்களின் மகிழ்ச்சிக்குரிய
பெயர்களைக் குறிக்கவில்லை. அடுத்த குயிலுக்கு ஆகட்டும்.