பக்கம் எண் :

286

Untitled Document


பாருங்கள்.   தமிழர்   வரலாறு   தலை   சாய்வதைப் பாருங்கள் வடமொழி
ஆர்பாட்டத்தைப்   பாருங்கள்,   நெய்வேலியைப் பாருங்கள். புதுச்சேரியைப்
பாருங்கள்.

     தமிழர் முகத்தைப் பாருங்கள். அவர்களின்  சாக்காட்டுத் தொகையைப்
பாருங்கள்.

     படித்திருவாளர்களைக் கடைசியாய் ஒன்று கேட்கிறேன்.

     அரிசியைக்   கேரளத்திற்கு    அனுப்புவதால், சென்னை நகர மன்றம்
காங்கிரசுக்குத் திருப்பிக் காட்டிவிட்டது. ஆதலால் உணவு மண்டலத்தினின்று
எம்மை நீக்கவேண்டும்   அரிசி புறம் போகக் கூடாது என்ற குறைபாட்டுக்கு
என்ன கூறியது தில்லி?   படித்திருவாளர்களின்  எதிர்ப்பைப் பெரியதென்று
நினைத்ததா தில்லி? -    எப்படியாவது காமராசர் அமைச்சரவை கவிழட்டும்
என்றுதானே எண்ணியிருக்கிறது அந்தக் கறைப்போக்கு?