பக்கம் எண் :

287

Untitled Document

6. டில்லி ஆட்சியாளர்க்கு!
எதையும் தீர ஆராய்க


(குயில், 8.3.60)


     ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக இருக்கிறது புதுவை அரசு!
அதனால்   அது தனக்குரிய வழியில் நடந்துசெல்ல முடியாமல் தத்தளிக்கிறது.
இந்நிலையில்  தவித்துக் கொண்டிருக்கும் புதுவை அரசு வெயிலில் காயாமலும்
மழையில்   நனையாமலும்  காத்து வருகின்றவர்கள்,  ஊர்க்காவல் துறையினர்
அல்லர்;   கல்வித்துறையினர்   அல்லர்; பொதுநிர்வாகத் துறையினர் அல்லர்,
இவர்களில்   பெரும்பாலும்  தத்தளிக்கும் புதுவையரசின் தலையில்  கிடைத்த
மட்டும்   மண்ணை   அள்ளித்   தூவுகின்றவர்களே. இவர்களிடம் ஒற்றுமை
யுணர்ச்சி   என்பது  மருந்துக்கு  இல்லை. தன்னலத்தையே  எண்ணி ஆவன
செய்கின்றவர்கள்.   இவர்களில்   பெரும்பான்மையோர்   தங்களுக்கு   ஒரு
கிராக்கியை   ஏற்படுத்திக்   கொள்ள  கம்யூனிஸ்டுகளைத்  தூண்டி விட்டுக்
கொண்டிருக்கின்றார்கள்.  நாம் சொல்லும் இந்த உண்மை  நிலையைத் தில்லி
அரசினர்    தெரிந்து   கொள்ளும்   காலம்   ஒன்று  இருந்தால் அதுதான்
புதுவையரசின்   தத்தளிப்பு நிலை காக்கப்படும் காலமாகும். புதுவையரசுக்கும்
இப்போது உயிர்த்தண்ணீர் ஊற்றி வருகின்றவர்கள் நீதித்துறையினர் தாம்.

     பிள்ளையையும்   கிள்ளிவிட்டுத்   தொட்டிலையும்  ஆட்டிக் கொண்டி
ருக்கும்   சிலரின்  நேரத்தோடு இன்றுள்ள நீதித்துறையினர் ஒரு தொடர்பும்
வைத்துக்  கொள்வதில்லை. கடமை யுணர்ச்சியில்லாத அவர்களின் போக்கை
இந்நாள் நீதித்துறையினர் நஞ்சென்று எண்ணுகின்றவர்கள்.

     மேலே   நாம் எடுத்துக்காட்டிய துறையினர்கூட இந்த நீதிக்காரர்களின்
தனித்த   போக்கை   தம்மோடு   கூடி  வயிற்றை  நிரப்பிக் கொள்வதோர்
கொள்கைக்கு   ஒத்துவராத  பெருந்தன்மையை உடைத்துத் தள்ள மறைவாக
முயற்சி செய்யாத நேரமே இல்லை.

     இவ்வாறு  இன்றுள்ள நீதித்துறையினரின் கட்டுப்பாடான ஒரு நிலையை
உடைத்துத்   தள்ளவேண்டும்    என்று உருவாகியுள்ள ஒரு கட்சிக்கு இன்று
செல்ல   நாயக்கர்   என்பவர்   தலைமை  வகிக்க   ஒப்புக்  கொண்டு தம்
குதிரையைப்