பக்கம் எண் :

288

Untitled Document


பள்ளமென்றும்    மேடு    என்றும்       பாராமல்    தட்டி    விட்டுக்
கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.நீதித்துறை என்ற  நல்லதொரு கூட்டைப்
பிய்த்துவிட எண்ணுகின்ற, அதனால் தம் திருட்டுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள
தண்டனையினின்று  தப்பித்துக் கொள்ள எண்ணுகின்ற கம்யூனிஸ்டுகளுக்குப்
பல நாட்களாகத்  துணை   புரிந்து வரும் செல்ல நாய்க்கர் இன்று உருவாகி
யுள்ள   கூட்டத்திற்கே  தலைமை தாங்க ஒப்புக் கொண்டது பற்றி - அந்த
அநீதிக்காரர்கள்- குதிக்கின்றார்கள்   அதே  நேரம் பொதுமக்கள்  உள்ளம்
கொதிக்கின்றார்கள்.

     நீதித்துறையைக்   காட்டிச்   செல்வத்தை மீதிப்படுத்தி மேல் மெத்தை
வைத்துக்   கட்டிக்   கொண்டதில்   தப்பில்லை. ஆனால் அந்த நீதிக்காரர்
களுக்கே   வெடிகுண்டு   தூக்கு  அநீதிக் கூட்டத்திற்கு ஆதரவு காட்டுவது
எவ்வளவு   சிறுமை   என்பது   நாம்   செல்லநாய்க்கருக்கு   நினைவூட்ட
எண்ணுகின்றோம்.

     செல்ல   நாய்க்கருக்குச் சிறு  நண்பர்கள் இருக்கலாம். அந்த நண்பர்
களுக்குச் செல்ல நாய்க்கர்  தனி முறையில் சலுகை காட்டலாம். அதைவிட்டு
அந்த நண்பர்களைத்திடீரென்று தருமமே வீற்றிருக்க வேண்டிய நாற்காலியில்
உட்கார வைத்துவிட  எண்ணினால், அவர்களின் தகுதி, ஆராய்ச்சி செய்யப்
பட வேண்டாமா?அல்லது  புதுவையரசு செல்ல நாய்க்கரின் அப்பன் வீட்டுச்
சொத்தா?

     செல்லநாய்க்கர் இன்றுள்ள நீதித்துறையினர் மேற்சொல்ல ஏதாவது பழி
வைத்திருக்கிறாரா?   அல்லது  அவர்,  நீதித்துறையில் சேர்த்துக் கொள்ளச்
சொல்லும்   இசுமாயிலுக்குச்   சொல்ல   அதாவது தகுதி வைத்திருக்கிறாரா
என்றால் இல்லவே இல்லை.

     இசுமாயில் யார்? பழைய அமைச்சர். ஏன் தள்ளுகடை செய்யப்பட்டார்
இல்லை   இல்லை   ஏன்    குறுக்கில்  பதவியை விட்டு ஓடினார்? செல்ல
நாய்க்கருக்கு   நினைவில்லாவிட்டால்   மருத்துவமனையில்  போய் விசாரிக்
கட்டுமே!  நேரமிருந்தால் பாகிஸ்தானுக்குப் போய் அங்குள்ளவர்கள் புதுவை
அமைச்சரை   நோக்கிக்   காறியுமிழ்ந்த   வெள்ளத்தில்   குளித்து  விட்டு
வரட்டுமே.

     இசுமாயிலுக்கா  நீதிபதி பதவி?  நீதித்துறையின் நிலை என்ன ஆகும்!
ததலாவுக்குப்  பெரிய அலுவலிடம் கொடுக்க வேண்டுமாம். ததலா மனிதரில்
ஒருவனாக மதித்திடவும் தகுதியற்ற ஆள் அல்லவா?

     செல்லநாய்க்கர்     சொல்லுகிறாராம்;     நீதிபதிகளும்   நீதித்துறை
அதிகாரியும் உறவினர் என்று!