பக்கம் எண் :

290

Untitled Document


அவர்களிடம் ஒப்படைத்த திறமை ஒன்றைத்தான் காட்ட முடியும். நீதிபதிகள்
வருவாய்த்   துறையினின்றும்   கல்வித்  துறையினின்றும் நீதித்துறைக்கு வர
வேண்டும் என்று ஒரு நியதி ஆட்சியாளர் தம் நினைவில் வைக்க வேண்டிய
ஒன்றாகிவிட்டது.

     அண்மையில் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றுக் கொள்வாரானால், அவ்விடத்
திற்கு   வரத்தக்கவர்   வருவாய்த்   துறையிலுள்ள  கோன்சதிரோலேர்தான்
என்பதும்     செல்லநாய்க்கருக்குத்    தெரியும்.   அன்றியும்    வருவாய்த்
துறையினின்று   நீதித்துறைக்கு   வந்தவர்கள்   அதற்குரிய  தகுதிச் சான்று
இல்லாதவர்களா?

     இன்று  நீதித்துறையில் எந்த மாற்றமும் இல்லை. தேவைதான் என்பவர்
தன்னலக்காரர்கள்.  கம்யூனிஸ்டுகள்  அடக்கப்பட  வேண்டும்.  அவர்கட்குப்
பரிந்து  பேசுகின்ற  ஆட்கள்   கலகக்காரர்கள்.  அதிகாரிகள்  கம்யூனிஸ்டு
களுக்கு  அஞ்சக்  கூடாது என்பதை நாம் எச்சரிக்கை  முறையில் தெரிவிக்க
எண்ணுகிறோம்.