பக்கம் எண் :

3

Untitled Document

     நமக்குண்டு பொறுப்பு,இவர்களைக்காப்பாற்ற வேண்டும் என்பதில்
பாரதியைக்  காப்பாற்றியது  போல!  அரவிந்தர்    முதலியவர்களைக்
காப்பாற்றியது போல்!   அடைக்கலம்  தருவது     மட்டுமல்ல.இந்திய
யூனியனுக்குப் படையுதவிதருவதன் மூலமாகவும்!

     பிரஞ்சிந்தியா  என   ஒன்று  இருக்கட்டும். பிரஞ்சிந்தியாவையும்
நல்ல நிலையில் - காமராஜ்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் வகையில்
வைத்திருப்போம் .

     எதிர்காலத்தில்-சில   ஆண்டுகட்கு-ஆண்டு ஒன்றுக்குப்  பிரஞ்சு
சர்க்கார் . பிரஞ்சிந்தியாவுக்கு   இரண்டு  கோடி   ரூபாய்  விழுக்காடு
கொடுத்து வரவேண்டிய   நிலைமையையும்   நாங்களும் நம் காலத்தில்
பொறுப்புள்ளி    திரு .பரொன்குவர்கனருமாகச்   சேர்ந்து    ஏற்பாடு
செய்துள்ளோம்   என்ற     நற்செய்தியை   மகிழ்ச்சியுடன் மக்கட்குத்
தெரிவித்துக் கொள்கிறோம்.