குயில், தினசரி, புதுவை, நாள் : 7.10.48 பக்.2-3-4
பிரஞ்சிந்தியாவின் அரசியல் பதவி அவர்கட்கு எட்டாத பழம். பிரஞ்சிந்திய மக்கள் அவர்களைப் புறக்கணித்து விட்டார்கள். அவர்களை எட்டிக்காய் என்றார்கள். ஏன்? அவர்களில் பெரும்பாலோர் வக்கீல்கள். வக்கீல்களில் பெரும்பாலோர் தமக்கு அரசியலில் ஏற்படும் செல்வாக்கைத் தன்னலத்திற்கு ஆக்கிக் கெட்டபேர் எடுத்தவர்கள். நாம் சொல்லும் இந்தக் கருத்தைப் புதுவையிலுள்ள ஒரு காங்கிரஸ் குழுவினரே ஏற்றுக் கொள்வதற்கு அறிகுறியாக அந்த வக்கீல் காங்கிரசை இன்று வரைக்கும் அவர்கள் ஒதுக்கி வரவில்லையா? இந்த நிலையில் சென்னை காங்கிரஸ் காரரில் சிலரின் தூண்டுதல் பெற்ற ஒரு சில பிரஞ்சிந்திய வாலிபர்களும் பதவி பெற முடியாத இரண்டொரு வாலிபர்களும் கெட்டபேர் வாங்கிய பல வக்கீல்களும்.ஒரு முடிவுக்கு வந்தார்கள்! என்ன முடிவு?சென்னைக் காங்கிரஸ் புறக்கணித்த பொது மக்களையும், அவர்களின் அபிலாஷைகளையும் பறக்கடிப்பது. எப்படி முடியும்?பொது மக்களின் நேர் பிரதிநிதிகளான முனிசிப்பல் அங்கத்தினர். மேயர்கள் சட்டசபை அங்கத்தினரில் பெரும்பாலோர்- இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? - புதுவையிலுள்ள கலகக்காரர்களின் செயலை அவர்கள் அறவே வெறுக்கவில்லையா?கலகக்காரர் எண்ணத்தை அவர்கள் அறவே எதிர்க்கவில்லையா? நடந்ததை நினைத்துப் பார்ப்போம் பிரான்ஸும் டெல்லியும்.இந்திய யூனியனுடன் பிரஞ்சிந்தியா சேருவதா சேருவதில்லையா என்பதற்கு மக்கள்
|