எண்ணத்தைத் தெரிந்து நடந்து கொள்ளலாம் என்று முடிவு கட்டினார்கள். அதற்கு முதலில் முனிசிப்பல் தேர்தல்களை நடத்துவது என்றார்கள்.அதை நடத்தும் முறையையும் வகுத்தார்கள். அதன்படி தேர்தல் நாளும் 10.9.48 என்று குறித்தாய் விட்டது. இத்தேதிக்கு முன்னதாகவே; சோஷலிஸ்டு கட்சியும், கம்யூனிஸ்டு கட்சியும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி நடத்தி வந்தன. இங்குள்ள காங்கிரஸ் அப்போது என்ன செய்தது? பள்ளிக்கூடப் பிள்ளைகள் தான் அகப்பட்டார்கள் அவர்கட்கு அவர்களை ஏமாற்றித் தூக்கிவிட்டார்கள். அப்பிள்ளைகளை என்ன செய்யச் சொன்னார்கள்? சட்டத்தை மீறச் சொன்னார்கள்? மாணவர்கள் என்ன நினைத்து மீறினார்கள்? நாம் சட்டத்தை மீறினால் நம்மை பிரஞ்சிந்திய சர்க்கார் சிறையில் போடுவார்கள்.அப்படிப் போட்டால் தினமணி சொல்லுகிறபடி இங்குள்ள காங்கிரஸ் வக்கீல்கள் சொல்லுகிறபடி இந்தியப்படை பிரஞ்சிந்தியாவில் புகுந்து பிரஞ்சிந்திய சர்க்காரை உதைத்துத்தங்களையும் மீட்டுக்கொண்டு தங்களுக்கு வேண்டிய தெத்தாக்களையோ லாம்பேர்களையோ பிரஞ்சிந்தியாவின் தற்கால அதிகாரிகளாக நியமித்து விடுவார்கள் என்று எண்ணித்தான் சட்டத்தை மீறினார்கள். அவர்கள் நினைத்தபடி.வக்கீல் காங்கிரஸ் சொல்லியபடி, அந்த இந்திய யூனியனின் சர்க்காராவது செய்து தொலைத்ததா என்றால் ஓரிழவும் இல்லை. இன்று வரைக்கும் பிள்ளைகள் சிறையில்தான் தூங்குகிறார்கள். பிள்ளைகளைத் தூக்கிவிட்டது தவிர இங்குள்ள காங்கிரஸ்காரர் என்ன செய்ய முடிந்தது? ஓமந்தூராரிடம் பணம் கேட்டுப் பார்த்தார்கள், வக்கீல்களுக்குச் சலுகை கேட்டுப் பார்த்தார்கள் இவையெல்லாம் மக்களின் ஆதரவுடையவர்களின் செயல்களா? அதன் பின் என்ன செய்தார்கள்? தினமணியைப் பிடித்தார்கள் கலகத்திற்கு! அதன் பிறகு என்ன செய்தார்கள்? 10.9.48 எலக்ஷனை நிறுத்த வேண்டும் என்று கெஞ்சினார்கள் இது யாருடைய தோல்வி? இந்திய யூனியன் கோரியபடிதான் பிரஞ்சிந்தியா, முனிசிப்பல் தேர்தலை ஒத்திவைத்தது என்பது மூடத்தனமான கலகக்காரர்களின் பேச்சே தவிர எண்பிக்கக் கூடியதாகுமா?
|