டில்லி சர்க்காரும் பிரஞ்சு சர்க்காரும் சேர்ந்து ஏற்படுத்திய முடிவுக்கு மாறாக - குறித்த நிபந்தனைப்படி முதலில் முனிசிப்பல் எலக்ஷன் நடப்பது அதன் பின் ரெபரெண்டம் என்ற பொதுவாக்கெடுப்பு நடப்பது - என்பதற்கு மாறாக எந்தப் புது மாறுதலையும் இங்குள்ள பெருமக்கள் அனுமதிக்கவில்லை. பொதுமக்களின் எண்ணப்படி இந்தப் பிரஞ்சிந்திய ஆட்சி நடைபெறுவது உண்மையானால் - பொதுமக்களின் இந்த எண்ணத்திற்குமாறாக எந்த முடிவையும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம்.
|