குயில், தினசரி, புதுவை, நாள் : 8.10.48; பக்.2-3
ஆதாரமற்ற பேச்சுக்களுக்கு அணுவத்தனையும் அஞ்ச வேண்டிய தில்லை.
நமக்குக் கொம்முயன்களிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் சில கடிதங்கள் வந்துள்ளன. அக்கடிதங்கள் ‘தினமணி’ பத்திரிகையின் பொறுப்பற்ற பொய்ப் பிரச்சாரத்தையும் உள்ளூரில் இருக்கும் இரண்டொரு வக்கீல்கள் கட்டிவிடும் கயிறுகளையும் நம்பி எழுதப்பட்டவை என்று தோன்றுகிறது. ஒரு படித்த டாக்டர். தம் நண்பர் வழியாகச் சொல்லியனுப்புகிறார் நமக்கு! என்னவென்று? ‘‘நாம் இந்திய யூனியனில் சேரமாட்டோம் என்று கூறினால் நம்மை எல்லாம் காட்டிக் கொடுப்பவர் என்ற குற்றம் சாட்டி, இந்திய சர்க்கார் பிடித்துக் கொண்டு போய்விடுவார்களே’’-என்று இவருடைய பேதமைக்கு நாம் இரக்கப்படாமல் வேறென்ன செய்ய முடியும். இவர் நினைப்பது நேர் மாற்றமானது. ஒருவன் எந்தச் சட்டத்தின் கீழ்க் குடித்தனம் செய்கிறானோ அவன், அந்தச்சட்டத்திற்கு உடைய அரசாங்கத்தை மற்றோர் அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுப்பவன்தான் காட்டிக் கொடுக்கும் குற்றத்தைச் சேர்ந்தவன், பிரஞ்சிந்திய அரசாங்கத்தின் சட்டத்தின்படி, தக்க வகையில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பேர் வழிகள், இப்போது தாமே ஒன்றையும் சொல்லாமல் ஏமாந்தவர்களைத் தூக்கிவிட்டுக் கலகம் செய்துகொண்டு போவது எதற்கு என்றாவது மேற்படி படித்தவர் தெரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. டில்லியும் பிரான்சும் கூடி ஓர் முடிவு செய்துள்ளது. அது என்ன?
பிரஞ்சிந்திய மக்கள் இந்திய யூனியனில் சேர நினைக்கிறார்களா? இல்லையா? என்பதையறிந்து கொள்வதற்காக முனிசிப்பல் தேர்தல் நடத்தி
|