அதில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு மெபரெண்டம் என்ற பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும், என்பதுதான் அந்த முடிவு. இவ்வாறிருக்கையில் இந்த முடிவுக்குப் பாதகம் விளைக்கும் முறையில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் குற்றமே! பாதகம் விளைப்பது மட்டுமல்ல , பாதகம் விளையத்தக்க முறையில் பேசினாலும் குற்றம் தான். இதுவே குற்றமானால் , இங்கு நடக்கும் கலகச் செயலும் பேச்சும் இந்த அரசாங்கத்தைக் காட்டிக் கொடுக்கும் முறையில் நடைபெறும் குசு குசு வேலைகளும் எவ்வளவு குற்றம் என்பது விரைவில் தெரியத்தான் போகிறது. மற்றும், கடிதக்காரர்கட்கு நாம் கோறுகிறோம்.‘தினமணி’கள் கலகக்காரர் சிலர் கயிறு திரிக்கிறார்கள். இங்குத் தனித்தனியாக -அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு பேசும் வக்கீல்மார்களின் வார்த்தையில் உண்மையிருக்கவில்லை. அவர்களையே கேட்டுப்பார்க்கலாம்’’ ஏனையா, இப்படியெல்லாம் பயமுறுத்துகிறீரே, இதை வெளிப்படையாய்ஏன் சொல்லவில்லை. எழுதப்பட ஏன் கூறவில்லை என்று இதே நேரத்தில் இந்திய யூனியனில் சேர்ந்து விட வேண்டும் என்று கூறுகிற எந்த யோக்கியனாவது, இதே நேரத்தில் தான், பிரஞ்சிந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடித்து உண்ணுவதை விட்டு, தன் உத்தியோகத்தையோ, பதவியையோ வேண்டாம் என்று கூறினானா? பிரஞ்சிந்தியாவில் அன்னியருக்கு அடிமையாக இருக்க ஒரு நொடியும் சம்மதிக்க மாட்டோம் என்று பேசும் யோக்கியர்கள் சம்பளம், வருமானத்தை மட்டும் வாரிவட்டிக்கு விடலாமா? அப்படியானால் என்ன அர்த்தம் ? இன்றைக்கே இந்திய யூனியனில் சேர வேண்டும். நீங்கள் சேராவிட்டால் பிரஞ்சிந்தியாவிலேயே கொள்ளையடித்துக்கொண்டிருப்போம் நாங்கள் - ஆதலால்தான் இப்போதே எங்கள் பதவி அலுவல்களை விட மறுக்கிறோம்என்றுஅவர்கள் கூறுவதாகத்தானே அர்த்தம்.
|