பக்கம் எண் :

47

Untitled Document


     பிரஞ்சிந்திய    சர்க்கார்   அப்படியல்ல.    இந்தச்  சர்க்கார் இங்கு
அடிவைத்த   நாளிலிருந்தே எல்லாரும் சமம் என்று தான்  சொல்லித் தன்
மூலக் கொள்கையை இன்றுவரை நிலைநிறுத்தி வருகிறது.

     இனிமேல்    ஒரு சமூகத்தின் நிலையைக் குலைக்கும்படி அது நடந்து
கொள்ள   எந்தக்    காரணமும்   இல்லை,   இருக்கவும்   முடியாது. சில
வெள்ளைக்காரர்    ஓட்டர்லிஸ்ட்  இரண்டாகவே  இருக்கவேண்டும் என்று
நினைத்தார்கள்; முடிந்ததா?

     தெப்புய்த்தே     வெள்ளைக்காரர்தான்   இருக்கவேண்டும்   என்று
எண்ணியதுண்டு.    விட்டோமா?   நம்   ஒற்றுமையால்  ஆக்கக் கூடாதது
ஒன்றுமேயில்லை.    அறிவுடையவர்கள்   இதை நன்றாக எண்ணிப் பார்க்க
வேண்டும்.

     இந்த   நிலையில்,    இந்திய   யூனியனில்  நாம்  சேர்ந்துவிட்டதாக
வைத்துக்    கொள்ளுங்கள்! உயர்  ஜாதிக் கிருஸ்துவர்களின் நிலை  என்ன
ஆகும்?
     
     ‘தினமணி’ சொல்லுகிறபடி புதுவை, காரைக்கால்கள் பிர்க்காதானே!

     சுகவாசஸ்தலங்கள் அனைத்தும் பார்ப்பனர்கட்குத் தானே!

     திரு.    கர்னேந்திர  முதலியாரும் எச்சிலை எடுக்கும் காப்பி ஓட்டல்
பார்ப்பானை விட மட்டம் என்று சொல்லவில்லை.

     இந்திய யூனியன் நிலை திருந்தித்தான் வருகிறது.

     ராமராஜ்யம்   ஒழிந்துதான் வருகிறது. இந்திய கிருஸ்துவ, இஸ்லாமியத்
திராவிடர்களுக்கு    ஏற்றவகையில்   திராவிட   நாடு சென்றுகொண்டுதான்
இருக்கிறது.

     திருந்தும்.      நாம்    அந்நாளில்   சேருவோம்  என்று கிருஸ்துவ
அறிஞர்கட்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.