பக்கம் எண் :

57

Untitled Document

மற்றொன்று

     குயிலின்   கொள்கையின்   முன்னேற்றத்தை இன்னும் விரைவுபடுத்த
எண்ணிப் பெருமுயற்சி செய்து   உதவலாம்.  பெரியோர்களும், எழுத்தாளர்
களும் குயில் விற்பனையாளர்களும்!

     குயிலில்   வரும்    இசைப்பாடல்களுக்கு   ஏற்ற இசை அமைத்துப்
பாடுகின்றதொரு பாடகர் குழுவை ஏற்படுத்தலாம்.

     அக்குழுவானது   விடுதலை,    குயில்,   ஈரோட்டுப் பாதை முதலிய
ஏடுகளையும், விடுதலை நிலையச்   சுவடிகளையும் அவையில்லா இடங்களில்
இருக்கும்படி செய்யும் ஓர் விளம்பர நிறுவனமாகத் திகழவேண்டும்.

     ஆங்காங்குள்ள    புகைவண்டி   நிலையத்தில்,   குயிலும் விடுதலை
முதலியனவும் விற்கப்படவேண்டிய வகையில் முயலுவதும்   இன்றியமையாது
வேண்டப்படும் தொண்டாகும்.