பக்கம் எண் :

59

Untitled Document


     என்   நினைப்பின்  ஒவ்வோர்  அணுவும் என் செயலின் ஒவ்வோர்
அணுவும்   என்   நாட்டின்   நலனை  ஊட்டம் செய்ய வேண்டும் என்ற
சரியானமுடிவுக்கு   அவன்   வந்துவிட்டான்   எனில்  அது இயற்கையின்
முத்தாய்ப்பு அல்லவா?

     எத்தனை வகையான அழைப்புகள். எத்தனைவகையான கருத்துக்கள்!
எத்தனை வகையான தேவைகள். எத்தனை வகையான இயக்கங்கள்!

     எத்தனை    வகையான  ஏமாற்றுப் பேச்சுக்கள் எத்தனை வகையான
வஞ்சனை   முழக்கங்கள்   அவன்  காதில் அலையடித்துக் கொண்டு வந்து
சேருகின்றன!

     நான்    தொண்டு செய்ய வேண்டும்! நான் தொண்டு செய்ய வாய்ப்பு
வேண்டும்! எங்கே எந்த இயக்கத்தில்?

     எது    தமிழ்த்தாயின்   தமிழகத்தின்  கட்டளை? எது தமிழ்த்தாயின்
தமிழகத்தில் பசி? அவன் உற்று ஆராய்கின்றான்.

     ஒரு குரல்  ‘‘தமிழர் ஒருதாயின் மக்கள்’’ சாதி என்பது சழக்கர் விட்ட
கரடி! ஒன்றுபடும் தமிழரே! ஒன்று மீட்போம் தமிழகத்தை என்கின்றது.

     தமிழ்    மாணவனைத்  தடுக்க முடியுமா? அதோ தாவி ஓடுகின்றான்
தொண்டு செய்ய, அறங்காக்க தமிழர்கள் வாழ - தமிழ்நாடு வெல்க!

     அவன்   முன்   திரிக்கப்படும்    சரடுகள்   பிசுக்குப்  பிசுக்கென்று
அறுகின்றன!

      வெல்க தமிழகம்!