அண்ணாமலைப் பல்கலைக்கழத்திற்கு பார்ப்பானைக் கொண்டு ஊர்ப்பானையைக் கவிழ்ப்பதே இதுவரைக்கும் மகிழ்ச்சி தந்த செயலாக இருந்து வந்தது கண்கூடு. இந்தச் செயலெல்லாம் பாழாய்ப்போய்விடவில்லை பார்ப்பனர் கட்சிக்கு நல்ல பயனை அளித்து வந்தது-வருகின்றது இன்றுவரைக்கும். இதோ பாருங்கள்! திராவிட மொழியாராய்ச்சி துறையில் புகுந்து தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், சேதுப்பிள்ளையும் விளையாடும் கத்தி விளையாட்டை! இளவரசரே உம்முடைய தாய், உம்முடைய தாய்மொழியாகிய தமிழ் வட மொழியினின்று வந்ததாம். உம்முடைய நாகரீகம், தமிழ் நாகரிகம்,வடவர் நாகரிகத்தினின்று வந்ததாம்! இவ்வாறு கத்தி விளையாடவில்லையா அதோ தங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில். தென்பெருந் தமிழகத்தில் ஒன்றுமே இருந்ததில்லையாம் தலைக்கழகம் இடைக்கழகம் என்பன கட்டுக்கதைகளாம். குமரிநாடு என்ற பேச்சே பொய்ப் பேச்சாம். இவ்வாறு கூறுவதோடு அந்த அறியாமையும் உயிர் வளர்க்கும் ஆசையும் உடையவர்கள் தமிழின் உண்மையை எடுத்துக் கூறும் அறிஞர்களையும் தொலைக்கப் போகின்றார்களாம். இவர்களையும் இவர்கள் ஆதரிக்கும் ஆட்களையும் தொலைக்கும் நாளை இவர்களே குறித்துக் கொண்டார்களா என்று கேட்க நான் ஆசைப்படுகின்றேன். வண்ணாத்தி என்பது வண்ணாஸ்திரி என்ற வடசொல்லின் சிதைவாம். இப்படி எல்லாம் வடசொற்களினின்றே வந்தனவாம்
தமிழ்சொற்கள்! தெ.பொ.மீ., சேது இவர்களை நோக்கி நாங்கள் கேட்க வேண்டும் உங்களுக்குக் கெட்டுப் போகும் காலமா என்று. இளவரசரே, நாழிகைதோறும் கைவலிவு தோன்றுகிறது. தெ.பொ.மீ சேதுக்களுக்கு நீங்கள் தூங்க வேண்டாம். இன்னும் தொடர்ந்து எழுதுகின்றேன். தமிழ்த்தாயின் வாழ்வு ஒழிக்கப்படுவதை! நீங்கள் இப்போதே செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். தெ.பொ.மீ., சேது இருவரையும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தினின்று திராவிட மொழியாராய்ச்சிக் குழுவினின்று துரத்திவிட வேண்டும். உங்கட்கு எத்தனையோ வேலைகள் இருக்கும்.ஆயினும் சற்றே திரும்புங்கள் இந்தச் சூழ்ச்சிக்காரர்களின் பக்கம்.
|