பக்கம் எண் :

63

Untitled Document

7. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2
பைந்தமிழ் ஒழிக்கும் பாழுங்கிணறா?


(குயில், குரல் 1, இசை 13, 26.8.58)


     திராவிட மொழி  ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்ற  எண்ணம்
கருப்பத்தினின்று   வெளிவந்தபோதே  தமிழர்கள் தம் மகிழ்ச்சியை அடக்க
முடியாமல் ‘தை தை’ என்று கூத்தாடினார்கள்அப்போதே இந்த எண்ணத்தை
உருப்பட வைப்பார்களா  வடக்கர் என்று நாம் ஐயுற்றதுண்டு. ஆனால் அது
உருவாயிற்று.     அண்ணாமலைப்      பல்கலைக்கழகம்   அத்திட்டத்தை
ஒப்புக்கொண்டு செயற்படுத்தவும் தொடங்கிற்று.

      முதலில் அது அதற்கொரு குழுவை ஏற்படுத்தவேண்டும். அறிஞர்கள்
அகப்படவில்லை  நம்       பன்மொழிப்புலவர்   ஒருவர்தாம்   இருந்தார்
தமிழ்நாட்டில்.....உடனடியாக அவரை மட்டும் ஏற்படுத்தினார்கள். தேவநேயப்
பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதற்கெனக்  குறிக்கப்பட்ட
இடத்தில் அமர்ந்து வேலையையும் தொடங்கினார் அவ்வளவுதான்!......

      நீள, நீள   அஞ்சல்கள் பறந்தன வடநாட்டை நோக்கி! நீள   நீளத்
தந்திகள் பறந்தன வடநாட்டை  நோக்கி! போதுமா? தமிழ்நாட்டிற் கிடைத்த
படித்த அடிமைகளைப்   பிடித்துத்   துரத்தினார்கள்  வடநாட்டை நோக்கி!
திராவிட மொழியை நடுவு நிலையினின்று ஒருவரோ ஒரு குழுவோ ஆராயும்
வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால் வடமொழி  தன் தலையைத் தொங்கப் போட்டுக்
கொள்ள நேரிடும். வடமொழிச் சார்பான இந்தி முதலிய மொழிகள்  முக்காடு
போட்டுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல

     உலக மொழிகளில்  தலையாய சில மொழிகளும் திராவிட மொழியால்
வளர்ச்சியடைந்த கதை,    மலிவுப்  பதிப்பாகிவிடும். இவ்வாறாகவே வடவர்
மொழிகளாகிய சருகுகள் காற்றில் பறக்க யாரைக் கேட்கவேண்டும்?

      அஞ்சல்  பறந்ததில்  வியப்பென்ன? தந்தி பறந்ததில் வியப்பென்ன?
அடிமையை   வடநாடு   ஓட்டியதில்   வியப்பென்ன?   வடநாடு   இந்தக்
கோளர்கட்கு   நூற்றுக்கு    நூறு   ஒத்திருப்பதாகக்   குறிப்புக் காட்டிற்று.
கூலிகளாகிய இந்த கோளர்கள் சும்மா இருப்பார்களா?