பக்கம் எண் :

64

Untitled Document


     தெ.பொ.   மீனாட்சி     சுந்தரனார்   சொன்னார்  அண்ணாமலைப்
பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் திராவிட மொழி
ஆராய்ச்சிக்குழுவை மேற்பார்வை பார்க்க ஒரு குழுவை ஏற்படுத்தவேண்டும்
என்று. இப்படி  தெ.பொ.மீ.  சொன்னதின் பொருள் என்ன? தம்மை இப்படி
ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.

     தெ.பொ.மீனாட்சியாருக்குத்    துணைவேந்தர்   ஒத்துப்  போகாமலா
இருப்பார்?   ஒத்துக்கொண்டது   மட்டுமன்று. தலையில் துணியைக் கட்டிக்
கொண்டு   களத்திலே   இறங்கிவிட்டார்.  வடக்கிலும் தெற்கிலும் இவ்வாறு
எக்கச்சக்கமான   கருங்காலிகளின் ஆதரவை எண்ணுந்தோறும்  தெ.பொ.மீ.
வறுவடைச்   சட்டியில்  நெற்பொரி போலக் குதிப்பார். கக்கத்துக் கத்தியை
நன்றாகத் தீட்டிக் கொள்வார்.ஓடுவார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
பாவாணரிடம்.

     தேவநேயப்   பாவாணரே,   நீர்   உம் வாயைத் திறக்கவே கூடாது-
திராவிட   மொழியின்     உண்மையை     வெளிப்படுத்தவே    கூடாது.
வெளிப்படுத்தினால் தொல்லை வரும்.

     இப்படி ஒரு கூலி!கையிருப்பில்லாத ஒரு  ஆள் எண்ணெயில் விழுந்த
பண்ணியம்   போல்    மதிப்பதென்றால்   பாவாணருக்கு  வியப்பாய்தான்
இருந்திருக்கும்.    ஆனால்   உற்றுநோக்கித்   தெ.பொ.மீ.யின்   முதுகில்
துணைவேந்தரும்   இருப்பதைத்  தெரிந்து கொண்டவராய் எண்ணக்கடலில்
தொபீர் என்று   விழுந்திருப்பார்  பாவாணர். இது பூச்சாண்டி இயக்கமாகப்
போய்விடவில்லை.

     வடஇந்தியாவில்,   திராவிடமொழியை   இருந்த   இடம் தெரியாமல்
ஒழித்தல்   வேண்டும்   என்ற   எண்ணமுள்ள பெரிய பெரிய தலைவர்கள்
பெரியபெரிய பேராசிரியர்களோடு இந்த தொ.பொ.மீ. கலந்து உறவாடுவதைப்
பாவாணர்    நேரே   கண்டார். தெ.பொ.மீ., சேது, நாராயணசாமிப்பிள்ளை
ஆகியோருக்கு   வடநாட்டுத்   தலைவர்கள்   இன்னின்ன வகையில் பதவி
கொடுப்பதாய்     வாக்களித்துள்ளார்கள்      என்பதையும்     பாவாணர்
கேள்விப்பட்டிருப்பார.   பாவாணர்   உள்ளம்  அதிர்ச்சி அடைந்திருக்கும்
ஆயினும் தளர்ந்திராது. ஏனெனில் பாவாணர் சட்டைப்பையில் நாலு கோடித்
தமிழர்கள் இருக்கின்றார்கள்.    எங்கேயோ   இருந்த  அதே   தெ.பொ.மீ.
இப்போது எங்கே   இருக்கிறார் தெரியுமா? அண்ணாமலைப் பல்கலைக்கழத்
திலேயே! என்ன சம்பளம் தெரியுமா? ஆயிரத்து ஐநூறு வெண்பொற்காசுகள்
இந்தத்   தொகை   தனிச்சலுகை காட்டுகின்றது. தமிழ்ப்புலவர்களே காட்டிக் கொடுக்கும்