பக்கம் எண் :

67

Untitled Document

8. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3

டாக்டர் சட்டர்ஜி முன்னுரை


(குயில், குரல் 1, இசை 14, 2.9.58)


     சென்றவாரக் குயிலின்  தலையங்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தின்   திராவிட    மொழி   ஆராய்ச்சிக்   குழுவின்  அமைப்பைத்
தெரிவித்திருந்தோம்.   அதில்   தலைவராகத் தேடி அமைக்கப்பட்டிருக்கும்
டாக்டர் சுனித்குமார்   சட்டர்ஜியின்    போக்கும்,  அவர்  மேற்போட்டுக்
கொண்டிருக்கும்   சமத்கிருதப்   பறையடிப்பும்  மற்றும்  பலவும்  சொல்லி
யிருந்தோம்.   அவரை   முன்வைத்தே   தமிழரை   ஒழித்துக்கட்டக் கூலி
பெறவேண்டும்    என்று   கங்கணம்   கட்டிக் கொண்டு திரியும் கோடாலி
காம்புகள் இன்னின்னார் என்பதையும் சொல்லியிருந்தோம்.

      இத்தலையங்கத்தில் டாக்டர் சட்டர்ஜி முன்னுரையில் சில பகுதிகளை
எடுத்துக்காட்டி அவர் முகத்திரையை கிழிக்க எண்ணுகின்றோம்.

      சென்ற   ஏப்ரல் 1957 வாக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில்
மேற்படி   திராவிட மொழி   ஆராய்ச்சிக்குழு   முதலாவதாகக்   கூடியது.
இக்குழுவின்   தலைவர்   டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி அல்லவா? அவர்
தலைமையுரை -   முன்னுரை கூறவேண்டுமல்லவா? அவ்வாறு அவர் கூறிய
முன்னுரை 34 பக்கங்கள் கொண்ட நூலாக அச்சிட்டிருக்கின்றார்கள் தமிழில்
அல்ல; மலையாள   மொழியில் அல்ல; கன்னட மொழியில் அல்ல. திராவிட
மொழிக் குடும்பத்திற்கும்  சம்பந்தமில்லாத  ஆங்கிலத்தில் தான்.  அந்நூல்
வெளியிடப்பட்டிருந்தது.   இதற்கு   என்ன காரணம்?  திராவிட மொழிகள்
ஒன்றையும் காதால் கேட்டதுமில்லை சட்டர்ஜி.

      இவ்வாறு வெளியிடப்பட்ட நூல்கள் எத்தனை என்றால் ஆயிரக்கண
க்கில்! வெளியில்  தலைகாட்டிய  படிகள்  எத்தனை என்றால் பதினைந்தே!
மீதியாக   உள்ள   படிகள்   எல்லாம் எங்கே என்றால் மீனாட்சி அழகும்
சேதுவும்   ஆகிய   பிள்ளைகளும்  தங்கள் வீடுகளில்  பின்கட்டில் உள்ள அறையில் அடுக்கி