பக்கம் எண் :

68

Untitled Document


     வைத்துக்   கொண்டார்களாம்.  நல்ல வேலை செய்தார்கள்.வெளியில்
மலிந்தால்        தமிழர்களின்   மூளையைக் கலக்க நேருமல்லவா? நஞ்சு
கலப்பது,    ஊசி மருந்தாக்குவது, ஊசி ஏற்றுவது, ஒட்ட மயிரை மாய்ப்பது,
சுடுகாட்டில் சுடுவது, சாம்பலைக் குவிப்பது   ஆகிய செயல்களையெல்லாம்
திரைமறைவில்   செய்து   முடித்துக்   கொண்டு, சாம்பலின் குவியல் மேல்
ஏறிநின்றுகொண்டு.

      எங்களைக் காட்டிக் கொடுக்கும்  திருப்பணிக்கு வெற்றி! ஒழித்தோம்
தமிழன்னையை!   ஒழித்தோம்   தமிழ்  மேன்மையை, ஒழித்தோம் தமிழர்
துடுக்கை,   நாங்கள்   மக்களினத்தைச்  சேர்ந்தவர்களா? இல்லை இல்லை.
ஈடும் எடுப்பும்   இல்லாத ஓராய்ப் பிறவிகள். மீனாச்சி அழகு, சேது என்று
பிறந்த பிள்ளைகள் நாங்களா? இரு கொள்ளிக் கட்டைகள்.

      என்று     முடிவுக்    கூத்தாட்டுவார்கள்.   அதற்குள்   படிகளை
நரிச்செயல்களை வெளியிடுவார்களா? வெளியிடக் கூடாதல்லவா?

      முன்னுரை  தொடங்குகின்றார்  சட்டர்ஜி. ஆனால் அந்த முன்னுரை
திராவிட மொழியாராய்ச்சி முன்னுரை இல்லை.அதற்கு முற்றும் மாறான ஒன்று
பற்றிய   முன்னுரை.   அவர்   சொன்னது!  திராவிட மொழியாராய்ச்சியை
இருகூறாகப்   பிரித்து   நடத்தலாம்  ஒன்று  திராவிட மொழிக்குள்ளேயே
ஆராய்ச்சி நடத்துவது;மற்றொன்று திராவிட மொழியையும் வடமொழியையும்
ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்துவது.

      பயிருக்கு   களை   பிடுங்கவந்த   சட்டர்ஜி   பயிரை  மேயவரும்
காளைக்கும் அண்ணாந்தாள் கழற்றப் போகிறாராம்.

      நேரே செல்ல மனமில்லை சட்டர்ஜிக்கு தம்மூர்க்குச் செல்லும் கொடி
வழிக்கும் வழிகாட்டுகின்றார்   திராவிட மொழியாராய்ச்சி என்ற தலைப்பை
விட்டு   எங்கேயோ  ஓடுகின்றார். முன்னுரையே மற்றொன்று விரித்தலாகிற
தல்லவா? என்ன அழகாக முடிச்சவிழ்க்கின்றார்! இன்னும் கேளுங்கள்.

      முற்காலந்தொட்டு ஆரியர்களும் திராவிடர்களும் வெளி நாடுகளிலும்,
இந்தியாவிலும் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்கிறார் சட்டர்ஜி. இதனால்
சட்டர்ஜி சொல்ல வருவது என்னவெனில்,

      திராவிடரும் வேறுநாட்டிலிருந்து இங்கு ஆரியர்போல வந்தவர்களே
என்பதாம். இன்றைக்குப்  பார்ப்பனரால் மாற்றியமைக்கப்பட்டு வரும் இந்தி
வரலாற்றை உறுதி செய்கின்றார்  சட்டர்ஜி. ஆரியர் இங்கு ஆடு மாடுகளை
ஓட்டிக்கொண்டு   வந்தவர்கள்  என்ற  உண்மை சட்டர்ஜிகளுக்கு இழிவை
உண்டாக்குகின்றது.   தமிழரும்   அவர்  போலவே  வந்தவர்கள்  என்று
கூறுவதில் சட்டர்ஜிக்கு மகிழ்ச்சி.