இப்போது இராசாசி கூட்டம் புது பல்லவி தொடங்கியதில் நாமெல்லாம் வியப்படைந்தோம். அவர்கள் சொல்லுவார்கள் ஆரியர்-திராவிடர் என்ற பிரிவு கலந்துபோய் விட்டது என்று. அதையும் சட்டர்ஜி, தம் முன்னுரையில் குறிப்பிட்டுவிட்டார். மேலும் சட்டர்ஜி ஆரியர் திராவிடர் சண்டைக்கு வழியில்லை இந்து மதத்தை எல்லோரும் ஒத்துக் கொண்டதன் வாயிலாக ஓர் ஒற்றுமைக்கு வந்துவிட்டார்கள் என்றும் முடிக்கின்றார். திராவிட மொழியாராய்ச்சி பற்றி பேச எழுந்தவர் ஆரியர் திராவிடரைப் பற்றி பேசிவிட்டு இந்துமதப் பற்றை முழக்கம் செய்து மனநிறைவு பட்டுக்கொள்கிறார். இவர் முன்னுரை நூலை ஆங்கிலத்திலுள்ளதைப் படிக்கும் ஒவ்வொரு வரும் ஏமாந்து போகும்படி இவர் மொழிநடை அமைந்திருக்கிறது. ஆனால் அந்த நடைக்குள் இவர் நெஞ்சம் புலனாகாமற் போகவில்லை.
|