பக்கம் எண் :

70

Untitled Document

9. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் . 4


சட்டர்ஜி கூட்டம் நீக்கப்பட வேண்டும்


(குயில், குரல் 1, இசை 15, 9.9.1958)


     தில்லி ஆட்சியாளர்களால் - நேருவால் தமிழர் வாழ்வு  எல்லா வகை
யாலும்   கெடுக்கப்படுகின்றன.   அதற்கு   காரணம்   தமிழர்   விடுதலை
கோருகின்றார்கள் என்பதாகும்.

     தமிழரின்   இந்த   எண்ணம்   இன்று    நேற்று தோன்றியதில்லை.
ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே  தோன்றியதாகும்.பெரியார்
அஞ்சாது கூறினார் அன்றே!   அன்று   தொடங்கி   அஞ்சாது பணியாற்றி
வருகின்றார் இன்றுவரைக்கும் . அத்தொண்டு நாளுக்கு நாள்  பயன்தரத்தக்க
நிலையடைந்து வருவதையும்   தில்லிக்காரர் பார்த்து வருகின்றார்கள். முதன்
முதலில் இந்த   இராசாசி   முதல்வராக   இருந்த காலத்திலேயே இந்தியை
கொணர்ந்து   அவர்   பட்டபாடு எச்சிலைக்கு  அலையும் நாயும் பட்டிராது.
அன்று கிளர்ந்தெழுந்த   மக்களின்  தோற்றம்  கடலினும் பெரிதாயிருந்தது.
அப்போது   நடந்த   ஒரு   கதையும்  நினைவுக்கு  வருகின்றது. இராசாசி
மறைமலையடிகளுக்கு   ஆள்   அனுப்பினார்.   அவரைச் சரிகட்ட. அவர்
இந்தியை எதிர்க்காதிருக்க! யாரை அனுப்பினார் தெரியுமா?

     இதே    கூலி,   இதே   மீனாச்சி  அழகைத் தான். மீனாச்சி அழகு
மறைமலையடிகளிடம்   வந்து என்ன சொல்லி  அழுதது தெரியுமா? திங்கள்
ஒன்றுக்கு ஐந்நூறு   வெண்பொற்காசு வருமானத்தில், ஓர் அலுவல் தருவார்
ஆச்சாரியார்   நீங்கள்  இந்தியை எதிர்க்காதீர்கள்! என்றார். கான்றுமிழ்ந்து
துரத்தினார் அடிகள்.

     தில்லிக்காரர் இந்தியைப் புகுத்த வந்தனர். பெரியார் கொடி எரிப்பால்
எதிர்த்தனர். படுத்தனர் தில்லிக்காரர் மீண்டும் எழுந்தனர். காலடி வழியாகப்
புகுத்துகின்றார்கள் இந்திப் பாம்பை.

     இதுமட்டுமன்று.   சமத்கிருதத்தை  மீண்டும்  உயிர்கொடுத்து எழுப்ப
வேண்டும்   என்றும்   கனவு  காண்கிறார்கள்.  வேலையும் சிறிய அளவில்
துவங்கியும் உள்ளனர்.