| மற்றொரு வழி கண்டுபிடித்தார்கள். எவரிடம் தமிழர்கள் இருக்கின்றார்களோ , எவரிடம் தமிழ்நாடு கட்டுப்பட்டிருக்கின்றதோ,அவரை அந்தப்பெரியாரைஒழித்துக்கட்டவுமான மற்ற வேலையெல்லாம் செய்தனர்- செய்து வருகின்றனர் . அரிசியை எல்லாம் மலையாளத்துக்கு ஏற்றுமதி செய்து தமிழரைச் சாகடிக்கின்றனர். மலையாளத்தினின்று அந்த அரிசி பாகிஸ்தானுக்கு போவது தெரிந்தும் பாகிஸ்தான் வாழ்ந்தாலும் வாழ்ந்து போகட்டும் தமிழர் சாகட்டும்என்று எண்ணியிருக்கிறார்கள். அதற்கு ஒத்துத் தாளம் போட்டுவர வேண்டிய நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் சென்னை அமைச்சர்கள். ஈழத்துத் தமிழர்கள், நாடற்றவர் என்று இழித்தார்கள் தில்லியினர். இன்னும்தமிழர்கள் ஒழிந்து போகவில்லை என்று ஆழ்ந்து கருதினார்கள் தில்லியினர் . தமிழின் மதிப்பை தொலைக்கவேண்டும்.அது தொலைந்தால் தமிழர்கட்கு தமிழ்ப்பற்றுக் குறையும். தமிழ்ப்பற்று ஒழியவே அவர்கள் உடலினின்று உயிர் ஒழியும் .தமிழ்நாடு திறந்த வீடாகிவிடும். வேண்டியளவு கொள்ளையடிக்கலாம் என்ற கண்டுபிடிப்புக்குப் பின்னர்தான் திராவிடர் மொழியைக் கொலை செய்ய -அதன்மதிப்பைத்தொலைக்க கிளம்பினார்கள். தில்லிக்காரர் நம்புகிறார்கள். திராவிடர் மொழியாராய்ச்சிக் குழுவினரைக் கொண்டு செயலில் வெற்றி பெறலாம் என்று. தில்லிக்காரர்கள் நம்புகிறார்கள். சட்டர்ஜியைக் கொண்டும் கூலி மீனாச்சி அழகைக் கொண்டும் கூலி சேதுப்பிள்ளையைக் கொண்டும் இதில் வெற்றி பெறலாம் என்று. அவர்கள் நம்புவதற்கு மற்றுமொரு காரணம் உண்டு! இந்தத் திராவிட மொழியாராய்ச்சிக் குழுவில் டாக்டர் இராசமாணிக்கனாரும் இருக்கிறார். டாக்டர் சிதம்பரநாதனும் இருக்கிறார். இவர்கள் தமிழுக்கு ஆதரவு காட்டி என்னகிழித்து விட்டார்கள். எலும்பு போடுவதாகத் தெரிந்தால் இவர்களும் கண்மூடி, வாய் வாளாது காட்டிக் கொடுக்காமலா போய்விடுவார்கள்?
இவ்வாறு எண்ணியும் ஊக்கம் அடையலாம் சட்டர்ஜி கூட்டம். இன்னும் அந்தக் குழுவில் தமிழ்ப்பற்று மிக்காராயிருக்கும் இராமநாதன் செட்டியாரும் இருக்கிறார். இவரும் தமிழை அழிப்பார்க்குத் தாளம் போடுகின்றார்என்று எண்ணலாம் சட்டர்ஜி கூட்டம்.
|