பக்கம் எண் :

72

Untitled Document


     மீண்டும் எச்சரிக்கை முறையில் இளவரசர்      முத்தையா அவர்கட்கு விண்ணப்பிக்கின்றோம்.

     உடனே இந்தக்       குழுவிலிருந்து      சட்டர்ஜி தெ.பொ.மீ., சேது
ஆகியோரைப் பிடர் பிடித்து    வெளியில் தள்ள ஆவன செய்ய வேண்டும்.

     கப்பலேறிச் சென்றுள்ள நாராயணசாமிப்பிள்ளை திரும்பி வந்தால், தமிழ்
ஒழிப்பு வேலைக்கு எந்த வகையிலும் ஆதரவு       கொடுக்காமல் திருத்திப்
பிழைக்கும்படிசெய்யவேண்டும் .

     டாக்டர் இராஜமாணிக்கனாருக்கும் ஓர்     வேண்டுகோள். ஆளுக்குத்
தக்கபடிவளைந்து கொடுக்கும் வேலை வேண்டாம்.

     டாக்டர் சிதம்பரநாதன் அவர்களுக்கு  விண்ணப்பம். நீங்கள் தமிழுக்கு
வாளைத்தூக்கி போர் செய்ய வேண்டாம்.     தமிழுக்கு தீமை செய்வோரை
ஒட்டிப்போகக்கூடாது .

     இராமநாதன் செட்டியாரைக்      கேட்டுக் கொள்கின்றோம். சட்டர்ஜி
கூட்டத்தைஆதரிக்கவேண்டாம் .

     உடனே தமிழைத் தொலைக்கக்    காப்புக்கட்டிக்      கொண்டுள்ள
இந்தக்கூட்டம்குழுவினின்று நீக்கப்படும் என்ற அறிகுறி ஏற்படாவிட்டால் நம்
தொடக்கத் தாக்குதல் பொதுக்கூட்டக் கண்டனங்களேயாகும்    என்பதைத்
திருவாளர் முத்தையா அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.