பக்கம் எண் :

73

Untitled Document

10. திருச்சியில் பெரியார்
80-ம் ஆண்டு விழாவும்

பாரதிதாசன் கவிதைப் போட்டியும்

இரண்டுநாள் நிகழ்ச்சி


(குயில், குரல்-1, இசை-18, 30-9-1958)


     திருச்சி    நெல்லாலை   உடையவர்   வள்ளல்   சுப்பிரமணியனார்
இவ்விழாவைத் தம் பொறுப்பில், தம் செலவில் நடத்தினார்கள்.

     பாரதிதாசன்    அவர்களின் தலைமையில் தலைவர் வேதாசலனாரும்,
பாவலர் பாலசுந்தரனாரும்,தோழர் சனார்த்தனமும் மற்றும் புலவர்கள்பலரும் தமிழர்க்குப் பெரியார்   கிடைத்தற்கரிய   தலைவர் என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இத்தகையத் தலைவர் தமிழருக்குக் கிடைத்ததில்லை என்றும் அப்போதும் கிடைத்திருந்தால்  இப்போது தமிழர் இந்தக் கீழான நிலையை
எய்தியிருக்க மாட்டார்கள் என்றும் கூறிப் பெரியார் நீனாள் வாழவேண்டும்
என்று வாழ்த்தினார்கள்.

குறிப்பிடதக்க செய்தி ஒன்று:

     சிறை    சென்று    சிறைகாப்புக்   கழுகுக்கு   இறையான  பத்துத்
தொண்டர்கட்கும்   பத்தாயிரம்   மக்கள் எழுந்து நின்று இரக்கம் காட்டிய
காட்சி வடவர் ஆட்சிப் பிடிப்பின் ஆணிவேரையே அசைத்தது எனலாம்.

     இரண்டு   நாட்களிலும்   இவ்வகைச்   சொற்பொழிவுகள் மட்டுமா?
பாரதிதாசன்   பாட்டுப்   போட்டியிற்  கலந்துகொண்ட ஏறத்தாழ அறுபது
பாடகர்களும்   இரண்டு   நாட்களிலும்  தொடர்ந்து பாடிக் காட்டினார்கள்.
தலைவர்     வேதாசலனார்     முதலிய   தீர்ப்பாளர்களின்  முடிவுப்படி
தேர்ந்தெடுக்கப்பட்ட       பாடகர்கட்கு   ரூ.50-ம்,   ரூ.30-ம்,   ரூ.10-ம்
வெள்ளிப்பதக்கமும், நற்சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.