இது மட்டுமல்ல! இரண்டு நாட்களிலும் தொடர்ந்து கலைநிகழ்ச்சி கண்ணையும் மனத்தையும் கவர்ந்தது. அக்கலை நிகழ்ச்சியின் ஆடல்வல்ல இரண்டு செல்வச் சிறுமிகள் இரண்டு சிறுமிகளின் ஆடல் முன்னேற்றமென்ற மலையுச்சியைத் தொட்டுவிட்டதாகத் தலைவர் குறிப்பிட்டார். அப்பாங்கில் சிறைசென்று மீண்ட தோழர்களுக்கும் வந்தார்க்கும் இருந்தாருக்குமாக இரண்டு நாட்களிலும் வள்ளல் நடைபெறுவித்த விருந்தில் பங்கு கொண்டோர் தொகை மிகப்பெரிது. திருச்சியே வியந்தது வள்ளல் பெருமனத்தை. இந்த விழாவில் பொதுமக்கட்குப் புதிய கருத்துக்கள் கிடைத்தன. பாரதிதாசன் குயிலிலும், நூற்களிலும் வெளிவந்த ஏறத்தாழ நூறு பாடல்களுக்கு ஏற்ற இசை கிடைத்தது.
|