பக்கம் எண் :

75

Untitled Document

11. அண்ணாமலைப் பல்கலைக்கழகமா?
  ஆரியர் அடிவருடும் கழகமா?


(குயில்,குரல்-1, இசை-19, 7-10-1958)


     கம்பராமாயணத்துப்  பாலகாண்ட  முதற்பகுதியை  அண்-பல்-கழகம்
வெளியிட்டுள்ளது.   இதற்குமுன்   சுந்தரகாண்டத்தையும்  பகுதி பகுதியாக
வெளியிட்டது நினைவிருக்கும்.

     அண்ணாமலைப்   பல்கலைக்கழகமானது   தமிழின்   மேல் அன்பு
காரணமாகத்   தமிழ்    வளர்ச்சியில்   உள்ள   அக்கரை    காரணமாக
கம்பராமாயணத்தை   வெளியிட   முன்வந்தது  என்று யாரும் நினைப்பதற்
கில்லை.   தமிழைப்   படுகொலை   செய்ய வேண்டும். தமிழ்க்கலை, தமிழ்
ஒழுக்கம்   மறைக்கப்பட   வேண்டும். ஆரிய முடிச்சுமாறித்தனமே பெரிது
படுத்தப்பட   வேண்டும்   என்றதொரு  கட்சியை முன்நின்று நடத்திவரும்
நேருவின்      காலில்   நெடுஞ்சாண்கிடையாக   விழுவதன்   வாயிலாக
அண்ணாமலைப்   பல்கலைக்கழகம்   வாணிகத்தைப்   பெருக்கவேண்டும்
என்பதுதான்   இந்த   வெளியீட்டின்   நோக்கமும்   என்றுதான் எண்ண
வேண்டியிருக்கிறது.

     பெற்ற   தமிழ்தாய்க்கும் பிறநாட்டினருக்கும் உற்ற தொண்டு செய்ய
உயர்வழி   இருக்க   குற்றமரபினர்  செல்லும் வழியில் கால் வைத்ததானது
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அழகாகாது.

     கம்பன் எப்படிப்பட்டவன்?

     இந்நாளில் ஆரியத்திற்கு ஆட்பட்டுக்  காரியத்தைச்  செப்பனிட்டுக்
கொள்ள எண்ணும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் போல, தமிழைக்
காட்டிக் கொடுத்தேனும் தம் வயிற்றை வளர்த்தால் போதுமென்று எண்ணும்
கருமுத்து   தியாகராசன்   போல,   குடிமை பிழைத்து அடிமை வியக்கும்
தெ.பொ.மீனாட்சி அழகு,  சேது   ஆகிய இரு பிள்ளைகளும் போல நூலடி
பிழைக்கினும்   பார்ப்பான்   காலடி  அறிந்தது  போதுமென்னும் நாமக்கல்
இராமலிங்கம்   போல  தமிழ்நெறி கசக்கும் ஆரியநெறியே அமிழ்து என்று
எண்ணும் அண்ணாதுரை போல வயிறு வளர்க்கக் கயிறு திரிக்கும் ம.பொ.சி