போல, கம்பனும் அந்நாளில் தமிழைக் காட்டிக்கொடுத்துப் பெருமையடைய எண்ணியவனே என்று அறியவேண்டும். அந்நாள், நாட்டுப் பெருவேந்தன் அவையில் பாட்டுப்பெருவேந்த னாய்த் திகழ்ந்திருந்த ஒட்டக்கூத்தனை எட்டத்தள்ள எதையும் செய்வது என்பதுதான் கம்பனின் திட்டம். அதனால் தான் கம்பன், அந்நாள் தமிழர் சிவநெறியினர் எதிர்ப்பையும், தமிழர் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் காஞ்சிப்பூணூற் கலப்படங்களைக் கூட்டிக்கொண்டு தமிழர் இயல்பை மறைக்க ஆரியக் கோணிப்பையைத்தான் அதாவது வான்மீகியின் ஆரிய இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தான். தான் செய்யும் அது தகுதியற்றது என்று தெரிந்திருந்தும் அதைச் செய்தான். அதனால் தான் அவன் தமிழ் இராமாயண நூல் தொடங்கும்போதே, வையம் என்னை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இந்த இராமன் கதையை மொழிபெயர்க்கிறேன் என்றான். மிக நாணயம் உடையவன் போல இவ்வாறு முன்மொழிந்து கொண்டான்.எனினும், அவன் தன்போல் இனத்தைக் காட்டிக் கொடுத்த தமிழர்கள் தமிழ்நாட்டில் உளரோ என்று தேடிப் பார்த்தான். நான் மட்டுமா?அதோ பலர் இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதுதான் கம்பன் ஆசை. ஆனால் அவ்வாறு எவரையும் காட்ட முடியவில்லை. எனினும் தான் மொழிபெயர்க்கும் இராமாயணக் கட்டுக்கதையில் கிடைத்தான் கோடாரிக் காம்பாகிய அநுமான். தூக்குகின்றான்; தூக்குகின்றான் கம்பன் அநுமானைத் தன் இராமாயணத்தில் இராமாயணச் சுவடியை செட்டிநாட்டு விலங்கு (யானை) தூக்குவதுபோல. ஏன் தூக்குகின்றான் அநுமானை? அப்படிப்பட்ட அனுமானே ஆரியனாகிய ராமனுக்காகப் போய்த் தமிழனாகிய இராவணன் நாட்டில் தீ வைத்தான். நான் ஆரியத்திற்காகத் தமிழியல்பில் தீ வைத்தது, ஒரு குற்றமா என்று காட்டுவதற்காக. அந்தச் செய்யுள் வருமாறு:
அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றா ருக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
என்பது. இந்தச் செய்யுளில்,
|