பக்கம் எண் :

77

Untitled Document


     அநுமான்,   ஆரியற்காக  ஏகி, ஐந்து பருப்பொருட்களில் ஒன்றாகிய
நிலம் ஈன்ற சீதையைக் கண்டு,  ஐந்து பருப்பொருட்களில் ஒன்றாகிய தீயை
அயலார் ஊரில் வைத்தான்   என்று கம்பன் கூறுவதை நினைவில் கொள்க.

     அந்தக்   காலத்தில்   கம்பனின்  தன்நலத்துக்கு இவ்வாறு செய்யுள்
செய்தான் எனினும்,   அதனால் இந்தக் காலத்தில் தமிழர் போராட்டத்திற்கு
எடுத்துக்காட்டான பல ஒண்மைக் கருத்துக்கள் கிடைக்கின்றன.

     1. தமிழர் வேறு ஆரியர் வேறு
     2. தமிழர் பண்பாடு வேறு ஆரியர் பண்பாடு வேறு
     3. இராமன் ஆரியன், இராவணன் தமிழன் என்கின்றார்கள்.

     தமிழர்   தலைவர்களும்,   தமிழறிஞர்களும்   ஆனால் இவைகளை
யெல்லாம் இப்போது ஆரியரும், ஆரிய  அடிவருடிகளும் மறுக்க வேண்டிய
நிலைக்கு வந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகம்,  அதிலும் அண்ணாமலைப்
பல்கலைக்கழகமானது அந்தத் திருட்டுப் பசங்களுக்குத்  தேங்காய்ச் சோறும்
பாலும் போட்டால்   அதைக்   குருட்டுத்தனம்   என்பதா?  முரட்டுத்தனம்
என்பதா? புரட்டுத்தனம் என்பதா?

     இப்போது அண்ணாமலைப்  பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள  பால
காண்டத்தின் மேற்படி செய்யுளில்,

     ஆரியற்காக ஏகி

என்பதை ஆருயிர்க்காக ஏகி என்று மாற்றி வெளியிட்டிருக்கிறது.

     இப்படித்தான் கம்பன்   பாடியிருப்பானாம்.   இவ்வாறு வெளியீட்டுக்
குழுவிலுள்ள ஏதுங்கெட்டவர்கள் கூறுகின்றார்கள். ஆருயிர்க்காக ஏகி என்று
கம்பன் பாடியிருப்பானா?   பாடினான்   என்றால்    சீதைக்காக ஏன் ஏகிச்
சீதையைக் கண்டு என்று பாட்டை அமைத்தான் என்றாகும்.

     பாட்டுச் சுவையுணர்ந்தானின் வீட்டு நாய் கூட இவ்வாறு குலைக்காது.

     இன்று இதனுடன் நிறுத்தி மற்றொரு முறை எழுதப்படும்.