எது தமிழரின் உயிர்நிலை? அதைக் கொல்வது தில்லியின் நோக்கம்! அது தமிழர்க்குப் பெருமைதரும் கூட்டம். அதை ஒழிப்பதுதானே தில்லியின் திட்டம்! இல்லையா?முனைத்த கட்டங்கள் அனைத்தும்தொலைக்கத் திட்டம் கண்டுபிடித்த தில்லியானது ஒன்றை மட்டும் மறந்திருக்கிறது. அதுதானே ‘தமிழ்நாட்டுப் படத்தொழில்!’ வடநாட்டுப் படத்தொழில் இன்று தோற்ற குதிரை!தமிழ்நாட்டுப் படத் தொழில் இன்று வென்ற குதிரை மட்டுமல்ல இனியும் வடநாட்டாரால் வெல்லமுடியாத குதிரையும் இல்லையா? தமிழ்நாட்டுப் படத்தொழில வடநாட்டானின் நெஞ்சை உறுத்தியது என்றால் காரணம் இதுதான். தமிழ்ப்படத் தொழிலைத் தொலைக்க வடநாட்டான் எண்ணியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் தமிழ்நாட்டுப் படக்கூத்தர்களைக் கையாலாகாதவர்கள் என்று அவர்கள் நினைத்ததுதான் வியப்புக்குரியது. தில்லிக்காரன் கொண்ட இந்த துணிச்சலுக்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டுப் படக்கூத்தர்கள் கண்ணீர்த் துளிகளின் பாவைகள் என்று நினைக்கும்படி அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டார்கள் .
அதனால் கண்ணீர்த்துளிகள் தற்காலம் குடித்தனம் பண்ணுவதற்குத் தமிழ்ப் படக்கூத்தர்தாம் காரணம் என்று தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டு அமைச்சர்கள் எண்ணி முடிவுகட்டியிருந்தார்கள். இடையில் புகுந்தான் தமிழரின் பகைவனான தில்லிக்காரன். தமிழ்நாட்டை நோக்கிக் கேட்டான் எப்படி? என்று! ஆம் தொலைக் கலாம் என்றது சென்னை. உடனே தில்லி அன்னை திடீரென்று பெற்றாள் கலையை ஒழிக்கும் கொலைக்காரப்பிள்ளையை! படநாடா இறக்குமதி கட்டுப்பாடு தமிழ்நாட்டைக் கெடுக்கும் அளவு வடநாட்டைக் கெடுக்கவில்லை இல்லையா? இப்போது படக்கூத்தர் தொடங்கியிருக்கும் அறப்போர் மிக வன்மை வாய்ந்தது. அவர்கள் எவரெவர்களை எந்த மட்டும் எடுத்தாளுகின்றனர்? அதுகூடச் சரிதான்! வெற்றி உறுதி ஆனால் படக்கூத்தர்களும் படத்தொழில் நுணுக்கர் களும் முதலாளிகளும், பட்டரைக்காரரும் தில்லியை நம்பக் கூடாது! நம்பக்கூடாது தில்லி கழுகை! நல்ல துப்பாக்கிகாரனை அவர்கள் கையோடு வைத்திருக்கவேண்டும்.
|