பக்கம் எண் :

8

Untitled Document
5. இனப்பெருமையைக் குலைக்க ஓர்
  இஸ்மாயிலாவது வேண்டாமா!

குயில், தினசரி, புதுவை. நாள்:17.9.48.ப.2-3.


     திரு. வக்கீல்   பெருமாளைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸின்
புதுக்கமிட்டி பற்றிச்சில   நாட்களின் முன் பத்திரிக்கைகளில் வெளிவந்த
செய்தியில்  G. அம்புருவாஸ்   கமிட்டி   மெம்பர்   என்று குறிப்பிடப்
பட்டிருந்தது .

     G. அம்புருவாஸ்,    ஞானு அம்புருவாஸ்  தானா?அப்படியானால்
G. அம்புருவாஸ்  என்று ஏன்          வழக்கத்திற்கு மாறாகக் குறிக்க
வேண்டும்  ? -      பெருமாளின்         வேலைப்பாடுகளில் இதுவும்
ஒன்றாயிருக்கலாம் .

     G. அம்புருவாஸ் என்று குறிப்பிட்டு வைத்தால் ‘‘ஏன்  ஐயா  என்
பெயரை என்   ஒப்புதல்   இல்லாமல்  வெளியிட்டீர்  என்று    ஞானு
அம்புருவாஸ்   கேட்டால்  இல்லை இல்லை அவர் வேறு ஆள் என்று
சொல்லிவிடலாம் . ஊரார் வந்து G.அம்புருவாஸ் ஞானு   அம்புருவாஸ்
தானா என்று    கேட்டால்   ஆம்  என்று மிகக் கணிசமாகச் சொல்லி
விடலாம் .    இப்படி  நினைத்தும் பெருமாள்அப்படி எழுதியிருக்கலாம்.
பெருமாள் நிலை அப்படித்தானே  இருக்கிறது. அவர் காங்கிரஸ் சட்டை
அணிந்து காட்டியும்   அவரைப் புருஷோத்தம் ரெட்டியாரின் காங்கிரஸ்
ஒத்துக் கொள்ளவில்லையே!   தம்   நண்பர்கள்   சிலர் தம் போக்கை
ஒத்துக் கொள்ளுவார்கள்   என்று  பெருமாள் நினைத்தார். அவர்களும்
அப்படி ஒத்துக்   கொள்பவராய் இல்லை! இந்த  நிலையில் தமக்கு ஒரு
கட்சியும்  வேண்டும்.   அந்தக்   கட்சியில்   அவர் இருக்கிறார், இவர்
இருக்கிறார் என்று காட்டவும் வேண்டும்.

     இனி   G. அம்புருவாஸ்,    ஞானு   அம்புருவாஸ்தான் என்றால்
அதுபற்றி   நாம்   வியப்படைய   வேண்டும்.ஏனெனில் சில நாட்களின்
முன்பு   கூட,   அவர்   தோழர்    கிளேமான்சோ  முதலியவர்களின்
வழக்கைப்   பேசி,   தம்   கம்யூனிஸ்டு  கொள்கையை  உறுதி செய்து
காட்டினார் .   அப்படியிருக்கையில்   அவர்  போயும் போயும் இந்தக்
காங்கிரஸ்   நெல்லிக்காய்   மூட்டையிலா தலையை விட்டுக் கொள்வார்.
ஞானு அம்புருவாஸ் ‘‘தொக்தேர் முன் துருவா!’’

     ஒருகால்   சில நாள் முன், திரு.ஞானு அம்புருவாஸ் சட்டசபைப்
பெரும்   பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளும் நிலையில் சில
நிகழ்ச்சிகள்