பக்கம் எண் :

9

Untitled Document

ஏற்பட்டன.   அதனால்  அவர் மனம்    நொந்து      காங்கிரஸில்
சேர்ந்திருக்கலாம் என்றால் நாம் அப்படி நினைக்கவில்லை.

     ‘‘தோல்வி   மனப்பான்மை தானே  பெருமாளைக் காங்கிரஸில்
சேர்த்தது! ஞானு அம்புருவாஸும் அப்படித் தான் என்று சொல்லலாம்.

     இதையும் நாம் நம்பவில்லை.

     ஏதோ சேர்ந்துவிட்டார்.    அவர்  சேர்ந்துவிட்டது மெய்,அவர்
காங்கிரஸ்காரராகி விட்டார்.இந்திய யூனியனில் சேர்வதென்றும் முடிவு
கட்டிவிட்டார், எனில் நாம் அப்படி நினைக்கவில்லை.   நம்பவில்லை.

     ஆனால்   புதுவைப்     புதுவக்கீல் வ. இஸ்மாயில், பெருமாள்
கட்சியில்    சேர்ந்து   விட்டார் என்றால்   நாம் அதை நம்பத்தான்
வேண்டும்! ஏனெனில் காரை - புதுவை முழுவதுமுள்ள முஸ்லீம்களின்
பெயரைக் கெடுக்க ஒருவராவது வேண்டுமல்லவா?