பக்கம் எண் :

82

Untitled Document


     ஆயிரம்   முறை   கூறிவிட்டோம் நேருவின் பழிவாங்கும் போக்கைச
சென்னை நல்லதொரு சாக்காகக் கொள்ளக்கூடாது என்று.

     நலிந்து வருகிறது சென்னை ஆட்சி! நல்ல மருந்து ஒன்றுதான். அதை
இன்றே அருந்த வேண்டும்.

     தமிழ்நாட்டு     அரிசி - நெல்    மலையாளத்திற்கு ஒரு மணிகூடப்
போகக்கூடாது.   போகிறதா   இல்லையா  என்று  பார்த்துக்கொண்டிருப்பது
தமிழ்மக்கள்   வேலையாக    இருத்தல்   கூடாது.   ஒரு ரூபாய் அவர்கள்
சென்னைப் படியால் குறைந்தது இரண்டுபடி நல்ல அரிசி பெற வேண்டும்.

     இந்நிலை   உடனே     ஏற்படவேண்டும். நாம் சென்னை ஆட்சியை
வாழச்சொல்கின்றோம்.