இப்போது புதிதாக வந்துள்ள உயர் அதிகாரியர்க்கு இந்த அரிசிப் பஞ்சப்புயல் தெரியாதா? எங்கும் கிடுகிடுக்கும் நிலை அவர் மாளிகையில் ஏறவில்லையா?
காரைக்கால் அரிசியில் ஒரு மணிகூட அயலூருக்கு காரைக்கால் சுற்றுப்பட்டு, புதுவைச் சுற்றுப்பட்டுத் தவிர ஏற்றமுடியாதபடி தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரிசி புதுவையிலும் விளையுமிடத்திலும் நயவிலைக்குக் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
|