பக்கம் எண் :

86

Untitled Document


     சட்டத்தைப்  பற்றி நினைக்கவும் அவர்கட்கு நேரமில்லை. சட்டசபை
நாற்காலிகள்   நிறைவு   செய்யப்பட்டன. இந்தத் தேர்வு செல்லும்  என்று
சொன்னார் செல்வநாயக்கர்.

     அரசினர்   கடைசி   ஆசையும்   வீணாயிற்று.   ஏன் வீணாயிற்று?
ஆசைப்படக் கூடாத ஒன்றுக்கு அவர்கள் ஆசைப்பட்டார்கள்.

     சட்டசபைக்     காங்கிரசுக்   கட்சிக்காரர்களே   நீங்கள்  அடுத்த
மாதத்திலாவது   அமைச்சர்கள் அறுவரைத் தேர்ந்தெடுங்கள் இதுவல்லவா
அரசினரின் ஆசை.

     முடியுமா! அமைச்சர் அவை அமைக்கமுடியுமா?அவர்கள்  சட்டசபை
அமைக்க ஒருதவணை   கொடுக்க வேண்டாமா? காங்கிரசு உறுப்பினர்களே
நீங்கள் அடுத்த நூற்றாண்டிலாவது அமைச்சர் ஆறுபேரைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளுங்கள்.

     என்று சொல்லியிருந்தாலும் சிறிது முன்னே பின்னையாவது அவர்கள்
அமைச்சரவைத்   தேர்ந்தெடுப்பார்கள்.   அதுவுமில்லை.   அமைச்சரவை
உண்டாக்கப்படும்   என்றுகூட   அரசினர்கள் எண்ணினார்களே. அதுதான்
நமக்கு வியப்பை உண்டுபண்ணியது!

     எப்படி   அமைச்சரவை   அமைக்கமுடியும்    வெடுக்கென்று தூக்கி
மீன்களை விட்டுவிடுமா? மீன்கொத்தி விட்டாலும் கட்டுவலைக்கு  உட்படுமா
மீன்கள்?   உட்பட்டாலும்   ஒரு    பொய்க்காலிக்     குதிரையைத்தானே
காணமுடியும்?   தன்   கால்கொண்டு ஆடுமா? மரக்கால் உதவ  இப்போது
அரசினரிடம் என்ன இருக்கிறது. முன்பே முடித்திருக்க வேண்டும். இப்போது
தான் அரசினர் சட்டசபைக்கு திருவாய் மலர்ந்தருளினர் திருவாசகம்!