பக்கம் எண் :

88

Untitled Document


     புதுவை    வட்டார   மக்களுக்குத் தேவைக்குப் போராடும் ஆற்றல்
இல்லை. ஆனால் தக்க நேரத்தில் பழிவாங்கி விடுவார்கள்.

     இன்றைய   ஆட்சியாளர்    மக்களின்   ஆதரவை  எதிர்பார்க்கும்
நிலையில்தான்   இருப்பதாக    எண்ணுகின்றோம். அவர்கள் என்ன செய்து
விடுவார்கள் என்று நினைத்தவர்களின்  நிலை, மண்ணாள  வரலாற்றுச் சுவடி
மிகப்பெரிது.

     இதை,   நாம்    மக்கள்    தலைவருக்குச்  சொன்னோம். மக்களின்
இன்றைய தேவைக்குப் பாடுபடுவதே முதல் வேலை. தேர்தல் அன்று!