பக்கம் எண் :

89

Untitled Document

17. தமிழர் எழுச்சி!


(குயில், குரல் 1, இசை 25, 18.11.1958)


     ஓர்   இனத்தாரின்இலக்கியத்தில் அமைந்துள்ளது அவ்வினத்தாரின்
பழம் புகழ்!

     ஓர்   இனத்தாரின் பழம் புகழில் அமைந்துள்ளது அவ்வினத்தாரின்
எதிர்கால எழுச்சி!

     தூய   தமிழிலக்கியத்தில் ஆரிய மறைக் கருத்தான ஊசி மருந்தைச்
சிறிது  சிறிதாக  நாளடைவில் ஏற்றி வந்தவர்கள் இன்று அதை அடியோடு
ஒழித்துவிடப் பட்டாவை உருவிவிட்டார்கள்.

     இந்த ஒழிப்பு வேலை நல்லதொரு திட்டமிட்டே தொடங்கப்பட்டிருக்
கிறது.   தமிழரின்   இன்றைய   எழுச்சியில்   படுவீழ்ச்சியை  அவர்கள்
உண்டுபண்ணுகிறார்கள். தமிழிலக்கியத்தைத் தொலைப்பதுதான் அதற்குவழி
என்பதை அவர்கள் அறிந்து முடிவு கட்டிக் கொண்டார்கள்.

     தமிழ் என்று ஒரு  தனிமொழி இல்லையாம். அது வடமொழியினின்று தோன்றியதாம். தமிழ்ப்பெருநூற்கள் அனைத்தும் வடவர் நூற்களின் மொழி
பெயர்ப்புக்களாம். தமிழர் நாகரிகம் ஆரியர் கழகத்தினின்று தோன்றியதாம்.

     தமிழும் தமிழர்  வாழ்வும் தொன்மையானது என்று கூறிக்கொள்வதில்
தமிழருக்கு ஒரு தனி ஆசையாம். அது பொய்யாம்.

     இவ்வகையான கட்டுரைகள்  அவர்கள் ஏடுகள் முன்பக்கத்தை அழகு
செய்கின்றது. இதற்கென்றே  புதிய வார இதழ்கள் தோன்றுகின்றன. பழைய
ஏடுகள் வாடகைக்கு பிடிக்கப்படுகின்றன.

     இது   பற்றிய  சொற்பொழிவுகளைக்   கேட்க ஆட்கள் சேர்க்கப்படு
கின்றனர்.     பல்கலைக்கழகங்கள்    இதில்      பெரும்  பங்கெடுத்துப்
பணியாற்றுகின்றன.  அண்மைய  ஐந்தாண்டுகளின்  முன்னுரைக்கும் இருந்த
தமிழர்-திராவிடர்    வரலாறுகள்   திடீரென்று    தலைகீழ்   மாறுதலுக்கு
உள்ளாகின்றன.  தமிழர்கள்-ஆரியர்கள் தமிழ்நாட்டில்   ஆரியருக்குப் பின்