பக்கம் எண் :

90

Untitled Document


     வந்தவர்கள்    என்ற புதைவானம் பள்ளிகளிலெல்லாம்  வேடிக்கை
காட்டுகின்றது.

     இதுபற்றி   அலுவலில் இருக்கும்தமிழ் புலவர்களின் உள்ளமெல்லாம்
தணலாகின்றன. ஆயினும் அச்சம் அதை அடக்கி வருகின்றது.

     தமிழே உயிர்   என்று எண்ணுகின்ற தமிழ் மாணவர்களின் அஞ்சாத
உள்ளம் அணை கடந்து போகும் நேரம் இது! ஆயினும் அவரை இழுத்துக்
கட்டி அவர்களிடம் ஓர் ஒழுங்குமுறை ஏற்படுத்தாமல் காலம்வீணாகின்றதே.

     திராவிடர்   கழகம்    வெறும்   பணியைத்   தலையில்  போட்டுக்
கொண்டிருக்கிறது.பகைவரின் முயற்சியாகிற தீத்திரளின் நடுவில் தமிழ் நலம
வைக்கப்பட்டிருந்தும்   அந்தத் தணலில் குதிக்கத் திராவிடர் கழகம் இராகு
காலம் பார்க்கவில்லை. அதை  அது குளிர்ந்த தாமரைப் பொய்கை என்றே
முடிவு செய்திருக்கிறது.

     ஆதலினால்தான் திராவிடர் கழகம் தன் தலைவர் பெரியார் கீழ்வரும்
திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

     அவை வருமாறு:

     1. நேரு அரசினர் எந்தெந்த வழியாக நம் பகைக் கூட்டத்திற்கு, பகை
எழுத்தாளர்க்கு, பகை ஏடுகட்குப் பணம் அனுப்புகிறார்கள்?-கண்டறிய  ஒரு
தனித் துப்பறியும் படைவேண்டும்.

     2. எந்தெந்த ஏட்டில்,எந்தெந்தப்பொதுக்கூட்டத்தில் எந்தெந்த நாளில்
தமிழைத்  தமிழிலக்கியத்தைத் தமிழ் வரலாற்றைக் குறைவு படுத்துகிறார்கள்?
அதே  நேரத்தில்  அவர்களின் பொய்ம்மையை எடுத்துக்காட்டி மக்களைத்
தட்டிக் கொடுக்க ஒரு புலவர் படைவேண்டும்.

     3. நம்   மேன்மையை,    தமிழின்   உயர்வை,  தமிழிலக்கியத்தின்
தொன்மையை எந்தெந்த நூலில் எந்தெந்த வரிகள் குறைவு படுத்துகின்றன?
அவைகளை    மறுத்து   மக்கட்கு   மெய்ம்மையை  எடுத்துக்காட்ட ஓர்
எழுத்தாளர் படை வேண்டும்

     4. எந்தெந்தப்    பள்ளியில்    எந்தெந்த    வகுப்பில்  எந்தெந்த
ஆசிரியர்கள்  தமிழையும்,  தமிழரையும் குறைவுபடுத்திப் பேசுகின்றார்கள்?
அவ்வப்போது   அதைத்   தெரிந்து   பூக்காமல்,  காய்க்காமல் வேரோடு
தொலைக்க,   பள்ளிதோறும்   உள்ளவர்களைக்   கொண்ட ஒரு மாணவர்
படை வேண்டும்.