பக்கம் எண் :

91

Untitled Document


5. தமிழன்  என்று   சொல்லிக் கொண்டு தமிழர்களை      அயலானிடம்
விற்கும் ஆட்களை   மக்கள் அரங்கில்  இழுத்து வைக்க அஞ்சா நெஞ்சு
படைத்த பேச்சாளர் படை ஒன்று தனியாக வேண்டும்.

     மேற்சொன்ன     ஒவ்வொரு  திட்டத்திற்கும்  தனித்தனி  வார ஏடு
வேண்டும் சுவடி வெளியீடுகள் வேண்டும். இந்த ஐந்து திட்டங்களும் தமிழர்
எழுச்சிக்கு உரம்  அல்ல; ஐந்து திட்டங்களே எழுச்சியும் வெற்றியும் என்க.