பக்கம் எண் :

93

Untitled Document


     அது   மட்டுமன்று. தமிழ்  பற்றிய எல்லாத்துறைகளிலும் அது தன்
ஆராய்ச்சியைச்   செலுத்தி  தன  முடிந்த   முடிவை   நிறுவவும் உறுதி
கொள்ளுகின்றது.

     எனவே   இத்தமிழ்   வளர்ச்சிக் குழு தமிழர்களுக்கு இரண்டாயிரம்
ஆண்டுகளாக இருந்து   வரும் குறைபாடுகளை நிறைவு செய்யவும் தமிழின்
பயனைத் தமிழர்கள் நுகர்ந்து பயன்பெறவும் ஆன வகையில் அமைந்த ஓர்
பயனுள்ள நிறுவனம் என்றே எண்ணி மகிழ்கின்றோம்.அதே நேரத்தில் இது
பெரும்    பொறுப்புள்ள   நிறுவனம்   என்பதையும்   குழுத்தலைவர்க்கு
நினைவுறுத்த எண்ணுகின்றோம்.

     இக்குழுவுக்கு   உறுப்பினரை    அனுப்ப   வேண்டிய நிறுவனங்கள்
தம்மிடமுள்ளவர்களில்   நல்லவர்களை   அனுப்புவதில்  அக்கரைகொள்ள
வேண்டும் தமிழின் பகைவர்களாகப் பார்த்து அனுப்பிவிடக் கூடாது,

     குழுவின்   தலைவரும்,   தாம்    தேர்ந்தெடுத்தது நல்ல விதைதான்
ஆயினும்,   விளைச்சலை   அழிக்கும்   மாடுகள் ஆடுகள் புகுந்துவிடாமல்
தக்கபடி   வேலி   அமைக்கவேண்டும்    என்பதில்  கருத்தாக இருந்தருள
வேண்டும்.

     நல்லவாறு     அமையும்  இந்தக் குழுவின் கீழ்வரும்  கருத்துக்களை
அடிப்படையாகக் கொண்டே தம்ஆராய்ச்சித் தொடங்க வேண்டும்.

     அந்த அடிப்படைக் கருத்துக்கள் வருமாறு:

     1. கடல் கொண்ட குமரிநாடு முதல் இமயம் வரைக்கும் 
       பரந்தமைந்த இந்நாவலந்தீவின் முதன்மொழி தமிழ் என்பது.

          என்றுமுள தென் தமிழ்
         இயம்பி இசை கொண்டான் (கம்பன்)


     2. தமிழின் தலைமை இடம், குமரிநாடு சேர்ந்த தென்னாடு என்பது.

     3. தமிழில் உள்ள எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே, மொழி
       பொருட் காரணம் விழிப்பத்தேகண்டு (தொல்காப்பியம்).

     4.  தொல்காப்பிய முதல் திருக்குறள் வரைக்குமுள்ள தமிழ்ப்         பெருநூற்கட்குள்ள  உரைகள் பெரும்பாலும் உரையாசிரியரின்
        மதம் பற்றியவை. அவற்றை முடிந்த முடிபாகக் கொள்ளலாகாது
        என்பது.