பக்கம் எண் :

10பேரறிஞர் அண்ணா

நாங்கள்      கண்டுபிடித்த     யாழின்     தன்மையது’    என்று
கூறியிருப்பார்கள்.    மீண்டும்    ‘அந்த    யாழ்    ஏது’   என்று
கேட்டிருப்பார்கள்,   ‘அது   திருப்பாற்கடலில்  கடைந்தெடுத்ததல்ல;
எங்கள்   இசையறிவில்   கடைந்தெடுத்தது’என்று  கூறியிருப்பார்கள்.
ஆரியர்கள்  முத்தைப்  பார்த்து ‘அது என்ன?’ என்று இருப்பார்கள்.
‘அது  தேவலோகத்துச்  சரக்கல்ல;  எமது தீரர்கள்  கடலில் மூழ்கிக்
கண்டெடுத்த முத்து’ என்றிருப்பார்கள், தமிழர்கள். அந்தக் கால நிலை
அவர்களுக்கு  அத்தகைய  நினைப்பைத்தான்   தரும்.  இது வரலாறு
கூறுகிற   விஷயம்.  வரலாற்று  ஆசிரியர்களும்  அறிவார்கள்.  ஒரு
காலத்தில்  ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். வந்தவர்கள்
வறண்ட  நாட்டிலிருந்து  வளமான நாடு தேடி வந்தார்கள்; வளமுள்ள
நாட்டில் புதியதாக உலவிய பொழுது அச்சத்துடனேயே உலவினார்கள்
என்பதை.   இது   வரலாற்று   ஆசிரியர்கள்  உங்களுக்குக்  கற்றுக்
கொடுக்கிற    பாடம்.   உங்களுக்குக்   கற்றுக்   கொடுக்கிறார்களோ
என்னவோ?  இது  எனக்கு  என் வரலாற்று ஆசிரியர் கலாசாலையில்
கற்றுக்   கொடுத்த  பாடம்.  கற்றுக்  கொடுத்த  பாடத்தை  மறுப்பது
ஆசிரியருக்கு அறமாகாது. கற்றுக்கொண்ட பாடத்தை மறப்பது எனக்கு
அழகல்ல.  குரு சொல் தட்டிய குற்றத்திற்கும் உள்ளாகிறேன். ஆகவே
நான் கற்றதைக்கூறுகிறேன்.
 

வளமான     நாடு.  அதில்,  வளைந்து செல்லும் வாய்க்கால்கள்.
வாய்க்கால்களுக்குப்  பக்கத்தில்  வயல்கள். வயல்களுக்குப் பக்கத்தில்
சாலைகள்.   சாலைகளுக்குப்   பக்கத்தில்  குன்றுகள்.  குன்றுகளைத்
தொட்டுத்   தடவும்  மேகங்கள்.  மேகங்கள்  தரும்  மழைத்துளிகள்,
மழைத்துளிகண்டு  மகிழ்ச்சியுறும்  மக்கள்  -  இவைகளைப் பார்க்கும்
வெளியிலிருந்து   வந்த  ஆரியர்கள்,  என்ன  எண்ணியிருப்பார்கள்,
என்ன எண்ணுவார்கள், என்ன எண்ணியிருக்க முடியும்?
 

சென்னை,      பட்டப்பகல்   12   மணி  நேரம்,  தார்  ரோடு
இளகியிருக்கிறது.   ஒருவன்   நடந்து   செல்கிறான்,   மற்றொருவன்
பக்கத்தில்  போட்டா மடி வேட்டி கட்டிக் கொண்டு மெருகு கலையாத
காரில்  செல்லுகிறான்;  காரைப்பார்த்து  நடந்து செல்லுகிறவன் என்ன
நினைப்பான்? நாம்தான் தினம்