விதண்டாவாதக்காரர்கள். வேதவேதாந்திகள், உத்த மோத்தமர்கள் என்ன எண்ணுவார்கள்? "நாம் நடந்து செல்லுகிறோம்; அவன் பறந்து செல்லுகிறான். நான் ஒதுங்கி நிற்கிறேன்; அவன் என்னை உராய்ந்துகொண்டு காரில் செல்லுகிறான் - நான்? பிறந்த வேளை நடந்து செல்லுகிறேன்" என்று எண்ணுவார்கள்! எப்படி எண்ணுவார்கள்? ஏன் எண்ணவேண்டும்? நடந்து செல்லுகிறவன் எண்ண மாட்டானா, ஏ ஆண்டவனே! இருவரும் உனது புதல்வர்கள்தான்; இருந்தும் வெயிலின் வேகத்தைத் தோற்கடிக்க அவனுக்குக் கார்; சிரமப்படாமல் செல்வதற்குச் செல்வம்; நான் நடந்து செல்லுகிறேன்; எனக்குக் காலுக்குச் செருப்புக்கூட வாங்கமுடியாதபடி தரித்திரம். இது ஏன்?" இதுமாத்திரம் எண்ணியிருக்கமாட்டான்; மேலும் தொடர்ந்து எண்ணியிருப்பான். | ரோட்டில் நடந்து செல்லுகிறவன் காரில் செல்லுகிறவனை முதலில் பார்த்ததும் ஏக்கப்பட்டிருப்பான். அருகில் வந்ததும் அசூசைப்பட்டிருப்பான். இவன் ஒதுங்கி ஓடும்படி அவன் மோதுவது போல், காரில் வந்தபோது கோபப்பட்டிருப்பான். கோபம், அவனைப்போல், நாமும் ஒரு காரில் செல்லவேண்டும். முடியுமானால் அவனுடையதைவிட ஒரு உயர்ந்த ஊர்தியில் அவனை உராய்ந்துகொண்டு செல்லுவது போல் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கிளறும். அது காரில் செல்லுகிறவனை அழிக்கும் வேலையை உருவாக்கும். இது சகஜம்! அவன் நிலை அவனுக்கு அத்தகைய நினைப்பைத் தருகிறது. வளமுள்ள தமிழ் நாட்டைப் பார்த்து வறண்ட நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் தமிழ் நாட்டின் செல்வத்தைப் பார்த்து எண்ணுவதிலிருந்து தப்பியிருக்க முடியாது. | பட்டப்பகல் பனிரண்டு மணி நேரத்தில் சென்னை தார் ரோட்டில் காரில் செல்லுகிறவனைப் பார்த்து நடந்து செல்லுகிற ஏழை எண்ணியதைப் போலத்தான் அவர்கள் தமிழர்களைப் பார்த்து எண்ணியிருக்க முடியும். அந்தக்காலம் இருக்கட்டும். அண்மையில் பர்மாவை ஜப்பானியர் பிடித்துக்கொண்ட பொழுது செல்வமுள்ள பர்மாவைப் பார்த்த ஜப்பானியர்கள், என்ன எண்ணினார்கள், என்ன |
|
|
|