போ!" என்று கூறிவிட்டுத் தன் நண்பர்களைப் பார்த்து, "Now a days don't agree with the Beggar problem Sir." என்று சொல்லுவான். கொஞ்ச நேரத்தில் ஒரு வாலிபனுடைய உள்ளம் மாறக் காண்கிறோம். முதலில் காலணா கேட்ட பிச்சைக்காரனுக்கு ஒரு அணாவை வீசி எறிந்த அதே வாலிபன்தான் மூன்றாந்தடவையாகப் பிச்சைக்காரனைச் சந்தித்தபோது "சீ! போடா!" என்று ஏசுகிறான். காரணம் காபி கிளப்பை விட்டு வெளிவந்தபோது இருந்த ஆனந்தம் மாறி, கையில் காசு குறைய ஆரம்பித்தவுடன் வழக்கமாக அவனுடைய மனம் மாத்திரம் என்ன; எவனுடைய மனமும், அந்த நிலையில் அப்படி மாறித்தானே ஆகும்! |
சாதாரண ஒரு பணக்கார வாலிபனுடைய நிலையே இப்படி என்றால், போக போக்கியத்தில் புரண்ட தமிழர்களுடைய நிலை எப்படி இருந்திருக்கும்? செல்வத்தில் புரண்ட தமிழர்களின் நினைப்பு முதலில்ஆரியர்களைக் கண்டதும், காபி கிளப்பை விட்டு முதலில் உல்லாசமாக வெளிவந்த வாலிபனுடைய நினைப்பைப் போலவே இருந்தது. தமிழகத்திலே செல்வத்திற்கு என்ன குறைவு. கடலிலே முத்து, சுரங்கத்திலே தங்கம், காட்டிலே அகில், நஞ்சை, புஞ்சை வெளிகளிலே நெற்களஞ்சியங்கள், பாசறைகளிலே போர்க் கருவிகள், கையிலே செல்வம், மனதிலே தாராளம் - இவ்வளவையும் பெற்றிருந்த தமிழர்கள் எளிய நிலையிலிருந்த ஆரியர்களைக் கண்டு இரக்கப் பட்டார்கள். தாராளமாக, தனத்தை அள்ளி அள்ளி அவர்களுக்குக் கொடுத்தார்கள், தாங்கள் தரித்திரராகி விடுவோம் என்பதை மறந்தார்கள். அவர்கள் தத்துவங்கள், நினைப்புகள். நம்பிக்கைகள் ஆகியவைகளுடன் தமிழர்கள் நினைப்பு கலந்தால் என்னவாகும்? தங்கள் தனிப்பண்பு என்பதைப் பற்றி அலட்சியமாயிருந்தார்கள். கவலைப்படவில்லை, தானம் தொடர்ந்து நடந்து வந்தது. ஆரண்யங்களிலும், சாலை ஓரங்களிலும், கோபுர வாசலிலும் வாழ்ந்து வந்த ஆரியர்கள் மாடவீதியில் குடியேற ஆரம்பித்தார்கள். எங்கும் ஓமப்புகை, வேத ஒலி பரவியது. தமிழர்களின் தனமும் குறைந்தது, தனிப்பண்பும் கெட்டது. |