கொஞ்சமாகக் குறையவும், கெடவும் ஏற்பட்டபொழுது முதல் இரண்டு தடவை பிச்சைக்காரனுக்குக் காசு கொடுப்பதால் பையிலுள்ள பணம் குறைவதைப் பற்றிக் காபி கிளப்பை விட்டு வெளிவந்த வாலிபன் அலட்சியமாக இருந்ததைப் போலவே தமிழர்களும் ஆரியர்களிடம் தங்கள் தனம் போய்ச் சேருவதைப் பற்றி அலட்சியமாயிருந்தார்கள். அதிகமாகச் செல்வம் குறைந்து, தமிழர்கள் கோட்பாடுகளுக்குள்ள செல்வாக்கும் குறைய ஆரம்பித்தவுடன், தமிழர்களுடைய நினைப்பும் மாறிவிட்டது. வளம் வறண்டவுடன் மனதிலே உள்ள தாராளம் சுருங்கி விட்டது. தாராளம் சுருங்க ஆரம்பித்ததும் நினைப்பு, தனம் சென்ற பக்கம் நோக்கிச் செல்லுகிறது, தமிழர்கள் "எப்படி தரித்திரரானோம்?" என்று தங்கள் மனத்தைத் தாங்களே கேட்டுக்கொள்கிறார்கள். அந்த விசாரணையின் தீர்ப்புத்தான், பிரஞ்சுக்காரர்கள் படையெடுப்புக்கு முன், பிரிட்டிஷார் படையெடுப்புக்கு முன், டச்சுக்காரர்கள் படையெடுப்புக்கு முன், போர்த்துகீசியவர்கள் படையெடுப்புக்கு முன், ஆப்கானியர் படையெடுப்புக்கு முன், அரபியர் படையெடுப்புக்கு முன், மகாவீரன் அலெக்சாண்டர் படையெடுப்புக்கு முன் இந்தியாவின் வடமேற்குக் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறிய காலந்தொட்டுத் தமிழகம் ஷீணதிசை அடைந்தது. அடைந்திருக்க வேண்டும். அவர்கள் கலப்பால்தான் தமிழ்நாட்டின் நிலை தாழ்ந்தது, நினைப்பும் தாழ்ந்தது என்று வரலாற்றில் இல்லை. ஆனால் ஆரியர்கள் சிந்துநதி தீரத்திலிருந்து தக்காணம் நோக்கி வந்தபோது தமிழகத்தில் செல்வம் கொழித்திருந்தது; தமிழர்கள் நெஞ்சில் நல்லெண்ணங்கள் குடிகொண்டிருந்தன என்பதும், ஆரியர் குடியேற்றத்திற்குப் பிறகு செல்வம் குறைந்திருக்கிறது; நல்லெண்ணங்கள் மறைந்து நச்சுக் கொள்கைகள் குடிகொண்டிருக்கின்றன என்பதும் வரலாற்று உண்மைகள். இதை யாரும் ஒப்புப்கொள்கிறார்கள்; மறுப்பதில்லை. எனவே ஆரியர்களது வேத இதிகாசக் கருத்துக்கள், அகநானூறு புறநானூறு கருத்துக்களை மறைத்துப் பிரகாசிக்கத் தொடங்கியவுடன் |